புதிய கேப்டன் ஆனால் அதே பழைய பஞ்சாங்கம் ! 2022 சீசனில் ஆர்சிபி சறுக்கல்களுக்கான காரணங்கள் – ஒரு அலசல்

Virat Kohli Du Plessis RCB vs GT
- Advertisement -

ஐபிஎல் தொடரில் கடந்த 2008 முதல் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி ஆகியோர் தலைமையில் இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை தொட முடியாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2016இல் விராட் கோலி தலைமையில் போராடி இறுதிப் போட்டி வரை சென்று கடைசி நேரத்தில் சொதப்பி 8 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை கோட்டை விட்டது. மேலும் 2013 – 2021 வரை அவர் தலைமையில் ஒருமுறைகூட கோப்பையை வெல்ல முடியாத காரணத்தால் விராட் கோலி இருக்கும் வரை பெங்களூரு அணி கோப்பையை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

RCB Faf Virat

- Advertisement -

புதிய கேப்டன், பழைய பஞ்சாங்கம்:
அதன் காரணமாக கடந்த வருடம் அந்த பதவியிலிருந்து அவர் விலகிய நிலையில் இம்முறை தென் ஆப்பிரிக்காவை வழிநடத்திய கேப்டன்ஷிப் அனுபவம் கொண்ட பஃப் டு பிளேஸிஸ் தலைமையில் புது ஜெர்ஸியுடன் புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய பெங்களூரு முதல் 7 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று அசத்தியது. ஆனால் அடுத்த 7 போட்டிகளில் சொதப்ப ஆரம்பித்து 3 வெற்றிகளை மட்டுமே பெற்று அந்த அணி டெல்லியை தோற்கடித்த மும்பையின் உதவியால் 4-வது அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு சென்றது.

அந்த நிலையில் 2020, 2021 ஆகிய அடுத்தடுத்து சீசன்களில் எலிமினேட்டரில் தோற்று வெளியேறிய அந்த அணி இம்முறை ரஜத் படிதார் 112* (54) ரன்கள் அதிரடியில் லக்னோவை தோற்கடித்தது. ஆனாலும் பைனலுக்கு முந்தைய குவாலிபயர் 2 போட்டியில் மீண்டும் பேட்டிங்கில் சொதப்பி ராஜஸ்தானிடம் தோற்ற அந்த அணி 15-ஆவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.

RCB Faf Du Plessis

மொத்தத்தில் புதிய கேப்டன் இருந்தாலும் பழைய பஞ்சாங்கத்தை போல அந்த அணியின் வெற்றி முடிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சரி இந்த வருடம் அந்த அணி சறுக்கியதற்கான முக்கிய காரணங்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. தாமத லெவன்: கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் ஹேசல்வுட் ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் பாகிஸ்தான் தொடரை முடித்துக் கொண்டு தாமதமாக அணியில் சேர்ந்ததால் ஆரம்பகட்ட 4 போட்டிகளில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. அதனால் ஆரம்பத்திலேயே அந்த அணியால் சிறப்பான ப்ளெயிங் லெவனை தேர்வு செய்ய முடியவில்லை. அதை ஈடு செய்வதற்காக இளம் டெல்லி வீரர் அனுஜ் ராவத்துக்கு தொடக்க வீரராக அளிக்கப்பட்ட வாய்ப்பில் அவர் 8 இன்னிங்சில் வெறும் 109 ரன்கள் மட்டுமே எடுத்து பின்னடைவை ஏற்படுத்தினார்.

Glen Maxwell

அதேபோல் ஆகாஷ் தீப், ஷேர்பன் ருத்தர்போர்ட், டேவிட் வில்லி போன்றவர்களை எக்ஸ்ட்ரா பவுலராக அந்த ஆரம்ப கட்ட போட்டிகளில் சோதித்து பார்க்க முயற்சித்த போது ஒரு போட்டியில் 206 ரன்கள் இலக்கை எளிதாக பஞ்சாப் அசால்டாக சேசிங் செய்ததால் அந்த முயற்சி அத்துடன் கைவிடப்பட்டது.

- Advertisement -

2. கைவிட்ட டாப் ஆர்டர்: இந்த வருடம் அந்த அணியின் தோல்விக்கு டாப் ஆர்டரின் மோசமான பேட்டிங்கே முக்கிய காரணமாகும். குறிப்பாக முன்னின்று ரன்கள் அடிக்க வேண்டிய விராட் கோலி முதல் 5 போட்டிகளில் 3 கோல்டன் டக் அவுட் உட்பட 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசிவரை சுமாராகவே செயல்பட்ட அவருடன் கேப்டன் டுப்லஸ்ஸிஸ் ஒருசில போட்டிகளை தவிர பெரும்பாலான போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை.

Virat Kohli 20

அதேபோல் கிளன் மேக்ஸ்வெல் சிறுசிறு அதிரடியான இன்னிங்ஸ் விளையாடினாலும் கடந்த வருடத்தை போல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பேட்டிங் செய்யவில்லை. அதுவும் இத்தனை ஸ்டார்கள் இருந்தும் ஹைதராபாத்துக்கு எதிராக 68 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானதே அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

- Advertisement -

3. ஏமாற்றிய தக்கவைப்பு: பெங்களூரு அணி ஏலத்துக்கு முன்பாக தக்க வைத்த 3 வீரர்களில் கிளென் மேக்ஸ்வெல் தவிர விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோர் ஓரளவு கூட சிறப்பாக செயல்பட தவறியது தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. அதிலும் 9 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட முகமது சிராஜ் 16 போட்டிகளில் வெறும் 9 விக்கெட்டுகளை 10.08 என்ற மோசமான எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினார்.

Mohammed Siraj De Kock

பலம் என்ன:
1. பந்துவீச்சு: கடந்த காலங்களில் பெங்களூருவின் தோல்விக்கு அந்த அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. ஆனால் இந்த வருடம் ஹேசல்வுட், ஹர்ஷல் படேல் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் ஏறக்குறைய அனைத்து போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் 3-வது வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் சுமாராக செயல்பட்டது அவர்களின் போராட்டத்தை வீணடிக்க வைத்தது.

அதேபோல் சுழல் பந்து வீச்சில் வணிந்து ஹசார்ங்கா அசத்திய நிலையில் சஹால் இல்லாத குறையை கிளன் மேக்ஸ்வெல் பகுதிநேர பந்துவீச்சாளராக சரி செய்தார். எனவே சிராஜ் தவிர அந்த அணியின் பந்துவீச்சு இந்த வருடம் பலமாக அமைந்தது.

இதையும் படிங்க : நம்ம ஊரு நம்ம கெத்து ! மீண்டும் வரும் டிஎன்பிஎல், 2022 சீசனின் முழு அட்டவணை இதோ – ஒரே குஷிதான்

2. மிடில் ஆர்டர்: 2016 போன்ற வருடங்களில் பெங்களூரு தோல்வியடைய மோசமான மிடில் ஆர்டர் பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் இந்த வருடம் குவாலிபயர் 2 போட்டியைத் தவிர அனைத்து போட்டிகளிலும் தினேஷ் கார்த்திக் அட்டகாசமாக செயல்பட்டு தூக்கி நிறுத்தினார். அதேபோல் நாக் அவுட் போட்டியில் 170 ரன்களை விளாசிய ரஜத் படிதார் அந்த அணியின் புதிய நாயகனாக உருவெடுத்துள்ளார். அவருடன் சபாஸ் அஹமத் மிடில் ஆர்டரில் வலு சேர்த்தார்.

Advertisement