டாப் 5ல 4 பேர் இப்படி செஞ்சா எப்படி ஜெயிக்க முடியும்.. மெகா தவறை எண்ணி நெதர்லாந்து கேப்டன் வேதனை பேட்டி

Scott Edwards 2
- Advertisement -

இந்தியாவில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவம்பர் 3ஆம் தேதி மதியம் 2 மணிக்கு லக்னோ நகரில் நடைபெற்ற 34வது லீக் போட்டியில் நெதர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46.3 ஓவரில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக எங்கல்பேர்ச்ட் 58, மேக்ஸ் ஓ’தாவுத் 42 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது நபி 3 நூர் அகமது 2 விக்கெட்கள் சாய்த்தனர். அதை தொடர்ந்து 180 ரன்கள் துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு கேப்டன் ஷாகிதி 56*, ரஹமத் ஷா 52 ரன்கள் எடுத்து 31.3 ஓவரிலேயே மிகவும் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

மெகா சொதப்பல்:
அதனால் ஜூல்பிகர், வேன் டெர் மெர்வி, வேன் பீக் தலா 1 விக்கெட் எடுத்தும் தோற்ற நெதர்லாந்து 7 போட்டிகளில் 5வது தோல்வியை பதிவு செய்து தொடரிலிருந்து வெளியேறுவதற்கு தயாராகியுள்ளது. மறுபுறம் 7 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் புள்ளி பட்டியலில் புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை முந்தி 5வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

முன்னதாக இப்போட்டியில் மேக்ஸ் ஓ’தாவுத், கோலின் ஆக்கர்மேன், எங்கல்பேர்ச்ட், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் என டாப் 5 பேட்ஸ்மேன்களில் 4 பேர் தேவையின்றி ரன் அவுட்டானது நெதர்லாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமானது. இந்நிலையில் டாஸ் வென்று 280 ரன்களை அடிக்க நினைத்த தங்களது அணியில் டாப் 5 பேரில் தாம் உட்பட 4 பேர் ரன் அவுட்டானது தோல்வியை கொடுத்ததாக ஸ்காட் எட்வர்ட்ஸ் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி போட்டியில் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “டாப் 5 பேட்ஸ்மேன்களின் 4 பேர் ரன் அவுட்டானது கண்டிப்பாக எங்களுடைய அணிக்கு நல்ல துவக்கம் கிடையாது. இந்த போட்டியில் நாங்கள் நல்ல துவக்கத்தை பெற்றும் அதன் பின் அனைத்தையும் இழந்தோம். ஆப்கானிஸ்தான் அணியிடம் தரமான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அதனால் அதிலிருந்து எங்களால் மீண்டு வர முடியவில்லை”

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்.. நெதர்லாந்தை ஊதி தள்ளிய ஆப்கானிஸ்தான்.. செமி ஃபைனல் செல்லுமா?

“மேலும் பனியின் தாக்கம் இருந்தது என்று நீங்கள் அதிகம் சொல்லக்கூடாது. நாங்கள் முதலில் பேட்டிங் செய்து நல்ல முடிவை எடுத்தோம். ஆனாலும் பனி இருக்கும் இந்த சூழ்நிலையில் 280 ரன்கள் எடுத்திருந்தால் நல்ல இலக்காக இருந்திருக்கும். இதிலிருந்து உடனடியாக மறுசீரமைத்து இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் நாங்கள் தயாராக வேண்டும்” என்று கூறினார். இந்த நிலையில் இங்கிலாந்தை தொடர்ந்து நெதர்லாந்து தங்களுடைய கடைசி போட்டியில் இந்தியாவை தீபாவளி தினத்தன்று எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement