IND vs NEP : இவங்களையே தடுத்து நிறுத்த முடியல. நேபாள் அணிகெதிரான இந்தியா தடுமாற்றம் – முதல் பாதியில் நடந்தது என்ன?

- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான தன்னுடைய முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இந்தியா 1 புள்ளி மட்டுமே பெற்றது. அதன் காரணமாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற நேபாலுக்கு எதிரான தங்களுடைய 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. இலங்கையின் கண்டி நகரில் bowliநேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் பும்ராவுக்கு பதிலாக ஷமி விளையாடுவார் என்றும் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய நேபாள் அணியின் துவக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே கொடுத்த 3 கேட்ச்களை இந்திய வீரர்கள் கோட்டை விட்டதை பயன்படுத்தி 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். அதில் கவுசல் புர்டேல் 38 (25) ரன்களில் தாக்கூர் வேகத்தில் அவுட்டாக அடுத்து வந்த பீம் சார்க்கியை 7 ரன்களில் க்ளீன் போல்ட்டாக்கிய ரவீந்திர ஜடேஜா அடுத்ததாக வந்த கேப்டன் ரோஹித் பௌடேலையும் 5 ரன்களில் காலி செய்து அதற்கடுத்ததாக வந்த மல்லாவையும் 2 ரன்களில் பெவிலியன் அனுப்பி வைத்தார்.

- Advertisement -

சராசரியான பவுலிங்:
அதனால் 101/4 என தடுமாறிய நேபாளுக்கு மறுபுறம் நங்கூரமாக விளையாடி அரை சதமடித்து 7 பவுண்டரியுடன் 58 ரன்களை எடுத்த ஆசிப் ஷேக் முடிந்தளவுக்கு போராடி முகமது சிராஜ் வேகத்தில் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது நேபாளை எளிதாக சுருட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு லோயர் மிடில் ஆர்டரில் திபேந்தர் ஆரி 29 (25) ரன்களும் சொம்பல் கமி 48 (56) ரன்களும் எடுத்து பெரிய சவாலை கொடுத்தனர்.

இருப்பினும் மழை வந்து ஒரு மணி நேரம் தாமதப்படுத்திய பின் மீண்டும் துவங்கிய போட்டியில் அவர்களை விரைவாக அவுட்டாக்கிய இந்திய பவுலர்கள் அடுத்து வந்த வீரர்களையும் ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்தனர். அதனால் 48.2 ஓவரில் நேபாள் 230 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்களை சாய்த்தனர்.

- Advertisement -

முன்னதாக கத்துக்குட்டியாக கருதப்படும் நேபாளை தரமான பவுலிங்கை கொண்ட அணியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் இதே தொடரில் 343 ரன்களை துரத்தும் போது வெறும் 23.4 ஓவரிலேயே 104 ரன்களுக்கு சுருட்டி மெகா வெற்றி கண்டது. மறுபுறம் பாகிஸ்தானுக்கு நிகரான பவுலிங்கை கொண்ட அணியாக கருதப்படும் இந்தியாவும் கத்துக்குட்டியான நேபாளை சுருட்டி வீசும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்ப முதலே சுமாரான ஃபீல்டிங் மற்றும் பவுலிங் காரணமாக தடுமாறிய இந்தியா நேபாளை சுருட்டுவதற்கு 49 ஓவர்கள் எடுத்துக் கொண்டது.

இதையும் படிங்க: IND vs NEP : இவங்களையே தடுத்து நிறுத்த முடியல. நேபாள் அணிகெதிரான இந்தியா தடுமாற்றம் – முதல் பாதியில் நடந்தது என்ன?

இதிலிருந்து இந்தியாவின் பவுலிங் பாகிஸ்தான் அளவுக்கு நெருப்பாக இல்லை என இந்திய ரசிகர்களை சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். அதனால் ஏற்கனவே இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திணறுவது கடந்த போட்டியில் அம்பலமான நிலையில் தற்போது இந்திய பவுலர்களும் சுமாராகவே செயல்படுவதால் 2023 உலகக்கோப்பையை வெல்வது கடினம் என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Advertisement