ஜெய் ஷா பேச்சை யாருமே கேட்கல.. என்சிஏ’வில் இருந்து அனுப்பப்பட்ட மெயில்.. சிக்கிய ஸ்ரேயாஸ் ஐயர்

Shreyas Iyer 2
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. முன்னதாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியின் போது காயமடைந்ததால் இத்தொடரில் இருந்து மொத்தமாக வெளியேறியுள்ளார்.

அதன் காரணமாக பரோடாவுக்கு எதிராக நடைபெற உள்ள 2024 ரஞ்சிக்கோப்பை காலிறுதி போட்டியிலும் மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட மாட்டார் என்று தெரிய வந்தது. அதை தொடர்ந்து வழக்கம் போல பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ள அவர் அங்கே காயத்திலிருந்து குணமடைவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

- Advertisement -

சிக்கிய ஸ்ரேயாஸ்:
அங்கே அவருடைய காயத்தை விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவ தலைமை நிர்வாகி நித்தின் படேல் தலைமையிலான குழு சோதித்ததாக தெரிகிறது. அதில் 2வது போட்டியில் சந்தித்த லேசான காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மேற்கொண்டு புதிய காயம் எதையும் சந்திக்கவில்லை என்று மருத்துவ சோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.

எனவே ஸ்ரேயாஸ் ஐயர் பரோடாவுக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை காலியிறுதி போட்டியில் விளையாடுவதற்கு ஃபிட்டாக இருப்பதாக என்சிஏ பிசிசிஐக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இது பற்றி அதில் நித்தின் படேல் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது காயத்தை சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது ஃபிட்டாகி தேர்வுக்கு தயாராக இருக்கிறார்”

- Advertisement -

“இந்திய அணியிலிருந்து வெளியேறிய பின் அவர் மேற்கொண்டு எந்த புதிய காயத்தையும் சந்திக்கவில்லை” என்று கூறியுள்ளார். அதனால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது பரோடாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் மும்பை அணிக்காக காயத்தால் விளையாட முடியாது என்று சொல்லி வெளியேறியுள்ளார்.

இருப்பினும் என்சிஏ அறிக்கையில் காயம் எதுவுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இப்படி விலகியுள்ளது பிசிசிஐ அதிருப்தியடைந்துள்ளது. குறிப்பாக தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து பணிச்சுமை காரணமாக விலகிய இசான் கிசான் ரஞ்சிக் கோப்பையில் விளையாடாமல் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வேலையை தொடங்கியுள்ளார்.

இதையும் படிங்க: 4வது போட்டிக்கான பிளேயிங் லெவனை வெளியிட்ட இங்கிலாந்து.. இந்தியாவை வீழ்த்த 2 அதிரடியான மாற்றங்கள்

அதனால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஃபிட்டாக இருக்கும் அனைத்து வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கடந்த சில தினங்களுக்கு முன்பாக எச்சரிக்கை கடிதம் வெளியிட்டிருந்தார். ஆனால் அவருடைய பேச்சை கேட்காத இஷான் கிசான் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை. தற்போது அந்த வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயரும் காயம் என்ற பெயரில் ஜெய் ஷா பேச்சை மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement