4வது போட்டிக்கான பிளேயிங் லெவனை வெளியிட்ட இங்கிலாந்து.. இந்தியாவை வீழ்த்த 2 அதிரடியான மாற்றங்கள்

Ollie Robinson 2
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக களமிறங்கியுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அனைவரது பாராட்டுகளை பெற்றது. இருப்பினும் 2வது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்த இந்தியா 3வது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தி 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

அதனால் பின்னடைவை சந்தித்துள்ள இங்கிலாந்து இத்தொடரை வெல்ல பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் துவங்கும் 4வது போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால் பஸ்பால் அணுகுமுறையை நிறுத்தி விட்டு சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடுங்கள் என முன்னாள் வீரர்கள் இங்கிலாந்து அணியை விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

பிளேயிங் லெவன்:
ஆனாலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி கடைசி 2 போட்டிகளில் வென்று 3 – 2 என்ற கணக்கில் இத்தொடரை வெல்வோம் என ப்ரெண்டன் மெக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் உறுதியாக நிற்கின்றனர். இந்நிலையில் ராஞ்சியில் நடைபெறும் நான்காவது போட்டிக்கான தங்களுடைய விளையாடும் 11 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து வழக்கம் போல ஒரு நாள் முன்பாகவே வெளியிட்டுள்ளது.

அதில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் மற்றும் இளம் ஸ்பின்னர் ரீகன் அகமது ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக ரீகன் அகமது இந்த தொடரில் இதுவரை களமிறங்கிய மூன்று போட்டிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் ரன்களை வாரி வழங்கினார். எனவே அவரை நீக்கியுள்ள இங்கிலாந்து நிர்வாகம் மற்றொரு இளம் ஸ்பின்னர் சோயப் பஷிரை அணிக்குள் கொண்டு வந்துள்ளது.

- Advertisement -

அதே போல மார்க் வுட்டுக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஓலி ராபின்சன் தேர்வாகியுள்ளார். ஆனால் கடந்த போட்டியில் பெரிய விக்கெட்டுகளை எடுக்க தவறிய ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ராஞ்சி மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது. மற்ற படி பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட ஜானி பேர்ஸ்டோ, பென் ஃபோக்ஸ் போன்ற மற்ற வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான் – மாற்றங்கள் இதோ

அந்த வகையில் இங்கிலாந்து 2 ஸ்பின்னர் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. மேலும் பென் ஸ்டோக்ஸ் இப்போட்டியில் பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜோ ரூட் 5வது பவுலராக செயல்பட உள்ளார். இங்கிலாந்து அணியின் லெவன்: ஜாக் கிராவ்லி, பென் டுக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (கீப்பர்), டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஓலி ராபின்சன்

Advertisement