80 சதமடிச்ச கோலிக்கு சொல்லத் தேவையில்லை.. இதுல முன்னேறுனா ரோஹித் அசத்தலாம்.. சித்து அட்வைஸ்

Navjot Sidhu
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தற்சமயத்தில் சுமாராக விளையாடி வருகிறார்கள். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சமீபத்தில் டெஸ்ட் தொடரில் இந்தியா வரலாறு காணாத ஒயிட் வாஸ் தோல்வியை பதிவு செய்தது. அடுத்ததாக நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரிலும் 3 – 1 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேற அவர்களுடைய சுமாரான பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ரோஹித், விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறலாம் என இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

சொல்ல தேவையில்லை:

இந்நிலையில் சுமார் 10000 டெஸ்ட் மற்றும் 80 சர்வதேச சதங்கள் அடித்துள்ள விராட் கோலிக்கு எதுவும் சொல்ல வேண்டியதில்லை என முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார். அதே சமயம் ரோஹித் சர்மா தன்னுடைய ஃபிட்னஸை உயர்த்தினால் மட்டுமே தொடர்ந்து அசத்த முடியும் என்று அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“80 அவங்கள் அடித்து 10000க்கும் நெருக்கமான ரன்களை குவித்துள்ள ஒருவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை. அவர் வீட்டுக்குச் சென்று தன்னுடைய ஆட்டத்தின் வீடியோக்களை பார்த்து பேட் தனது உடம்பிலிருந்து வெளியே இருப்பதாலேயே அசத்த முடியவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டு தீர்வுகளை பெற முடியும்”

- Advertisement -

சித்து ஆலோசனை:

“ரோகித் சர்மாவுக்கும் அது பொருந்தும். ஆனால் அவர்கள் இருவருடைய டெக்னிக் வித்தியாசமானது. இருப்பினும் ரோஹித் சர்மா தன்னுடைய உடல் தகுதியில் வேலை செய்ய வேண்டும். சிறந்த வீரரான அவர் தங்கத்தை போன்றவர். இன்று வேண்டுமானால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரால் நன்றாக விளையாட முடியாமல் போயிருக்கலாம்”

இதையும் படிங்க: இப்போவும் ரோஹித், கோலி அதுல கில்லி தான்.. தனது 2025 சாம்பியன்ஸ் ட்ராபி அணியை தேர்ந்தெடுத்த ஆகாஷ் சோப்ரா

“ஆனால் டி20 உலகக் கோப்பையில் மிட்சேல் ஸ்டார்க்கிற்கு எதிராக அவர் 3 சிக்ஸர்களை அடித்தார். அதை அனைவரும் மறந்து விட்டார்களா? அனைத்தையும் தாண்டி ரோஹித் சர்மாவும் மனிதர் தான். அதனால் இன்னும் பயிற்சிகளை செய்யும் போது ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேனாக முன்னேறுவார்” எனக் கூறினார். இதை அடுத்து சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக விளையாடி தங்களுடைய தரத்தை நிரூபிக்க விராட் கோலி, ரோஹித் சர்மா முயற்சிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement