இப்போவும் ரோஹித், கோலி அதுல கில்லி தான்.. தனது 2025 சாம்பியன்ஸ் ட்ராபி அணியை தேர்ந்தெடுத்த ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஏமாற்ற தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதற்கடுத்தபடியாக துபாயில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையில் இந்தியா விளையாட உள்ளது. அதில் சுமாரான பார்மில் இருக்கும் விராட் கோலி, ரோஹித் சர்மா அசத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தம்முடைய இந்திய அணியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்ந்தெடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் ஒருநாள் போட்டிகளில் ரோஹித், விராட் கோலி இப்போதும் கில்லி தான் என்பதை அவர் புள்ளிவிவரமாக பேசியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

இந்திய அணி:

“சந்தேகத்துக்கு இடமின்றி ரோஹித் சர்மா தான் இந்தியாவின் கேப்டனாகவும் துவக்க வீரராகவும் செயல்பட வேண்டும். ஏனெனில் 2023 உலகக்கோப்பை துவக்கம் முதல் அவர் 14 இன்னிங்ஸில் 754 ரன்களை 54 என்ற சராசரியில் குவித்துள்ளார். அதில் சதம் 5 அரை சதங்கள் அடங்கும். மறுபுறம் சுப்மன் கில் அதே காலகட்டத்தில் 12 இன்னிங்ஸில் சதம் அடிக்காமல் 5 அரை சதங்களை மட்டுமே அளித்துள்ளார்”

“411 ரன்களை 37.4 என்ற சராசையில் குவித்துள்ள அவருடைய செயல்பாடுகள் போதுமானதாக இல்லை. எனவே பேக்-அப் ஓப்பனிங் வீரராக ஜெயஸ்வால் அணியில் இருக்க வேண்டும். பின்னர் 14 போட்டிகளில் 74 என்ற சராசரியில் 3 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த இலங்கைத் தொடரில் அவர் அசத்தவில்லை”

- Advertisement -

சாம்பியன்ஸ் ட்ராபி அணி:

“அதையும் தாண்டி 74 என்ற சராசரியை கொண்டுள்ள அவர் கடந்த உலக கோப்பையில் எவ்வளவு அசத்தினார் என்பதை நினைத்துப் பாருங்கள். அவர்களைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக இடம் பெறுவார்கள். கடந்த உலகக்கோப்பைக்கும் முன் அக்சர் பட்டேல் காயமடைந்ததால் ஒருவேளை இந்தியாவுக்காக நித்திஷ் ரெட்டி தேர்ந்தெடுக்கப்படலாம்”

இதையும் படிங்க: கேரியர் இப்படி முடிஞ்சது ஏமாற்றமா இருக்கு.. அஸ்வின் போல கழற்றி விடப்பட்டது பற்றி கப்டில் பேட்டி

“ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோருடன் குல்தீப் யாதவ் ஸ்பின்னராக விளையாட வேண்டும். துபாயில் சுழல் பந்து வீச்சு பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் அந்த மூவரும் நமக்கு தேவை” என்று கூறினார். அதே போல வேகப்பந்து வீச்சு துறையில் சர்துல் தாக்கூரை கழற்றி விட்டுள்ள ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஷமி ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement