கேரியர் இப்படி முடிஞ்சது ஏமாற்றமா இருக்கு.. அஸ்வின் போல கழற்றி விடப்பட்டது பற்றி கப்டில் பேட்டி

Martin Guptill
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக நியூசிலாந்து நட்சத்திர வீரர் மார்ட்டின் கப்டில் அறிவித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. 2009 – 2022 வரை நியூசிலாந்துக்காக விளையாடிய அவர் நிறைய வெற்றிகளில் பங்காற்றிள்ளார். குறிப்பாக 2015 உலகக் கோப்பையில் இரட்டை சதத்தை அடித்து சாதனை படைத்த அவர் 2019 உலகக்கோப்பை செமி ஃபைனலில் தோனியை அவுட்டாக்கி நியூசிலாந்தை ஃபைனல் அழைத்துச் சென்றதை மறக்க முடியாது.

23 சதங்கள் 13463 ரன்கள் குவித்து நியூசிலாந்தின் வெற்றிகளில் பங்காற்றிய அவர் சமீப காலங்களில் தடுமாறி வந்தார். மறுபுறம் டேவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்கள் ஓப்பனிங் இடத்தில் நியூசிலாந்து அணிக்காக அசத்தி வருகிறார்கள். அதன் காரணமாக அவருக்கு நியூசிலாந்து அணி வாய்ப்பளிக்காமல் கழற்றி விட்டு வந்தது.

- Advertisement -

அஸ்வின் போல:

அதனால் 38 வயதில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளதாக கப்டில் தெரிவித்துள்ளார். இருப்பினும் நியூசிலாந்து அணிக்காக வெற்றிகரமாக கேரியரை முடிக்க விரும்பியதாக அவர் கூறியுள்ளார். ஆனால் இந்திய அணி வெளிநாட்டில் வாய்ப்பு கொடுக்காததால் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றது போல் திறமையை நிரூபித்தும் தமக்கு டாப் ஆர்டரில் வாய்ப்பு கிடைக்காததால் விடை பெற்றுள்ளதாக கப்டில் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சூழ்நிலைகளை கணித்து நான் அதற்கு தகுந்தார் போல் முடிவை எடுத்துள்ளேன். கண்டிப்பாக இன்னும் கொஞ்சம் விளையாட நான் விரும்பினேன். நியூசிலாந்து அணிக்காக இன்னும் என்னுடைய பங்களிப்பை கொடுக்க விரும்பினேன். ஆனால் அது இப்படி தான் முடிந்தது. என்னுடைய கேரியர் அனைத்தும் இவ்வாறு முடிந்ததில் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்”

- Advertisement -

ஏமாற்ற ஓய்வு:

“ஆனால் நான் முன்னோக்கி செல்ல வேண்டும். ஐந்தாவது இடத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு எனக்கு இருந்தது. ஆனால் துவக்க வீரராக நான் விளையாட விரும்பியதால் அது பறிபோனதில் எனக்கு கவலை இல்லை. கிடைத்த வாய்ப்பில் மகிழ்ச்சியாக என்னுடைய செயல்பாடுகளை கொடுத்தேன். நியூஸிலாந்து அணிக்காக வெளிப்படுத்திய செயல்பாடுகளால் நான் மிகவும் பெருமையுடன் வீட்டில் அமர்ந்திருப்பேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: கோலியை தடை பண்ணிருக்கனும்.. தம்பி கோன்ஸ்டஸ் இந்தியா மாதிரி எங்ககிட்ட வாலாட்ட முடியாது.. ஹார்மிசன் பேட்டி

அந்த வகையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு நியூசிலாந்து வீரர் ஃபேர்வெல் இல்லாமல் ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே சமயம் 38 வயதில் ஓய்வு பெற்ற அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து உள்ளூர் டி20 போட்டிகளில் கப்டில் தொடர்ச்சியாக விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார்.

Advertisement