99இல் 89.60 ஆவெரேஜ்.. விராட் கோலி இன்னும் 3 வருசம் விளையாடி 15 செஞ்சூரி அடிக்க இதுவே போதும்.. சித்து ஆதரவு

Navjot Sidhu
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பாகிஸ்தான் 242 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு விராட் கோலி சதத்தை அடித்து 100*, சுப்மன் கில் 46, ஸ்ரேயாஸ் 56 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார்கள்.

அதனால் செமி ஃபைனல் செல்லும் வாய்ப்பை இந்தியா கிட்டத்தட்ட உறுதி செய்த நிலையில் பாகிஸ்தான் வெளியேறுவது 99% உறுதியாகியுள்ளது. முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி சமீப காலங்களில் சுமாரான ஃபார்மில் இருந்தார். இருப்பினும் இந்தப்போட்டியில் நிதானமாக விளையாடிய அவர் தமக்கு மிகவும் பிடித்த ஒருநாள் கிரிக்கெட்டில் 51வது சதத்தை அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

இன்னும் 15 சதங்கள்:

அதனால் தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்த விராட் கோலி சேஸ் மாஸ்டர் என்பதற்கு அடையாளமாக செயல்பட்டார். இந்நிலையில் இன்னும் 2 – 3 வருடங்கள் விளையாடி 10 – 15 சதங்கள் அடிக்கும் திறமையும் தகுதியும் விராட் கோலியிடம் இருப்பதாக முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இந்த சதத்துக்கு பின் விராட் கோலி இன்னும் 2 – 3 வருடங்கள் விளையாடி 10 – 15 சதங்கள் அடிப்பார் என்று நான் உறுதியாக சொல்வேன். சச்சின் டெண்டுல்கர் எப்போதும் பின்னங்காலில் பஞ்ச் கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பார். கவாஸ்கர் நேராக ஸ்ட்ரைட் டிரைவ் அடிப்பார். அதே போல விராட் கோலியை பார்த்தால் அவர் தன்னுடைய தலையை பந்துக்கு மேலே வைக்கும் போது அழகாக கவர் ட்ரைவ் அடிக்கிறார்”

- Advertisement -

சித்து ஆதரவு:

“இந்தப் போட்டியின் துவக்கத்தில் விராட் கோலி அடித்த ரன்கள் விமர்சனம் செய்த அனைவருக்கும் தன்னுடைய குணத்தை அவர் காட்டுவது போல் இருந்தது. இது போன்ற சூழ்நிலைகளைக் கடந்து கிரிக்கெட்டராக வரும் நீங்கள் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக இருப்பீர்கள். இந்தியாவில் அவர் அனைத்து புறங்களிலும் விமர்சனம் செய்யப்பட்டார். 10 பேர் இருந்தால் அவர்களிடம் 20 வகையான கருத்துக்கள் இருக்கும்”

இதையும் படிங்க: சதத்தை நெருங்கிய கோலிக்கு ரோஹித் வைத்த கட்டளை.. கூலாக முடித்துக்கொடுத்த சேஸ் மாஸ்டர் – என்ன நடந்தது?

“அந்த 20இல் 18 – 19 கருத்துக்கள் எதிராக இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி கொண்டு வரும் மதிப்பை நீங்கள் உணர வேண்டும். வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் 99 இன்னிங்சில் 89.60 என்ற சராசரியை கொண்டுள்ள விராட் கோலி அழுத்தத்தை எந்தளவுக்கு கையாள்கிறார் என்பதை நீங்கள் புரிய வேண்டும். அழுத்தத்தை அவர் அனுமதிக்கவில்லை. அது கடினமாகும் போது அசத்துவதே அவருடைய முத்திரையாகும்” என்று கூறினார்.

Advertisement