ஆஸியில் யார் 150 ரன்ஸ் அடிச்சா? சுயநலமற்ற ரோஹித் சர்மா தான் 2027 உ.கோ கேப்டனா இருக்கனும்.. சித்து பேட்டி

Navjot Sidhu
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அதன் வாயிலாக 3 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது. அதற்கு முன்பாக 2024 டி20 உலகக் கோப்பையையும் ரோஹித் சர்மா தலைமையில் வென்று இந்தியா சாதனை படைத்தது.

அதன் வாயிலாக தோனிக்கு பின் ஒன்றுக்கும் மேற்பட்ட ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெற முடியாமல் இந்தியா வெளியேறியது.

- Advertisement -

ரோஹித்துக்கு ஆதரவு:

அந்தத் தோல்விக்கு பேட்டிங்கில் சுமாராக விளையாடிய ரோஹித் சர்மா முக்கிய காரணமாக அமைந்ததால் விமர்சனங்களை சந்தித்தார். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தன்னைத்தானே இந்திய அணியிலிருந்து ரோகித் சர்மா நீக்கிக்கொண்ட ரோகித் சர்மா சுயநலமற்ற முடிவையும் மோசமான சாதனையும் படைத்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் இடத்தில் விளையாடியவர் 150 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தாரா? என்று முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே சரியான மாற்று வீரர் கிடைக்காத வரை ரோகித் சர்மா 2025 இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மட்டுமின்றி 2027 உலகக்கோப்பை வரை தொடர்ந்து விளையாடலாம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி சித்து பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் இந்தியாவின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்? யார் ரோஹித் போல அசத்துவார் என்று என்னிடம் சொல்லுங்கள்?”

- Advertisement -

2027 வரை இருக்கலாம்:

“அந்த டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சுயநலமில்லாமல் விளையாடவில்லை. ஆனால் அவருக்கு பதில் விளையாடியவர் 150 அடித்தாரா? முதலில் உங்களிடம் சரியான மாற்று வீரர் வேண்டும். ரோகித் சர்மாவை நீங்கள் எப்படி மாற்ற முடியும். இங்கிலாந்தில் அவருடைய புள்ளி விவரங்களையும் சதங்களையும் பாருங்கள். துன்பம் என்னும் பள்ளியில் தான் அனுபவம் என்னும் பாடம் கற்க முடியும்”

இதையும் படிங்க: இந்த ஒரு விஷயம் போதும்.. சன் ரைசர்ஸ் தான் இம்முறை கப் அடிப்பாங்க – ஆகாஷ் சோப்ரா கருத்து

“எனவே ரோஹித் சர்மா மட்டுமே கேப்டனாக இருக்க வேண்டும். அவர் என்ன செய்ய வேண்டும்? 2 ஐசிசி கோப்பைகளை வென்றவரை நீங்கள் சோதிக்கலாமா? 2027 உலகக் கோப்பை வரை ரோஹித், விராட் கோலி, ராகுல் போன்ற மூத்தவர்களும் நித்திஷ் ரெட்டி, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் போன்ற இளய வீரர்களும் இருக்க வேண்டும். இது போன்ற கலவையாக இல்லாதவரை உங்களால் நல்ல அணியை உருவாக்க முடியாது” என்று கூறினார்.

Advertisement