இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது இறுதி போட்டி வரை சென்ற பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியானது கொல்கத்தா அணியிடம் தோல்வியை சந்தித்து கோப்பையை இழந்தது. கடந்த தொடரின் ஆரம்பகட் போட்டிகள் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் அணி மிக பலம் வாய்ந்த அணியாக இறுதி போட்டிக்குள் நுழைந்திருந்தாலும் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சறுக்கல் அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் இம்முறை மீண்டும் கோப்பையை கைப்பற்றியாக வேண்டிய உத்வேகத்துடன் அந்த அணி களமிறங்க காத்திருக்கிறது.
சன் ரைசர்ஸ் அணியகாந் கோப்பையை கைப்பற்றும் : ஆகாஷ் சோப்ரா
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் அந்த அணியில் உள்ள சில குறைகளை நீக்கி அதற்கு ஏற்ற வீரர்களை தேர்வு செய்த சன்ரைசர்ஸ் அணி தற்போது முழு பலம் கொண்ட அணியாக இந்த தொடருக்காக தயாராகியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை சன்ரைசர்ஸ் அணிதான் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதைய சன் ரைசர்ஸ் அணியின் பிளேயிங் லெவனை பார்க்கையில் துவக்கத்தில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் ஆகிய மூன்று வீரர்கள் அதிரடியான வீரர்களாக இருக்கிறார்கள். அவர்களால் அதிரடியான துவக்கத்தை அளிக்க முடியும். அதுமட்டும் இன்றி மிடில் வரிசையிலும் ஹென்றிச் கிளாசன் மற்றும் நித்திஷ் ரெட்டி ஆகியோர் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள்.
மேலும் விக்கெட் கீப்பராக அபினவ் மனோகரும், கேப்டனாக பேட் கம்மின்சும் அடுத்தடுத்த இடங்களை வலுப்படுத்துகிறார்கள். மீதமுள்ள நான்கு இடங்களில் முகமது ஷமி, ஹர்ஷல் படேல், ஆடம் ஸாம்பா, ராகுல் சாகர் என சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருப்பதால் அந்த அணியால் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் ஆதிக்கத்தை செலுத்த முடியும். கடந்த ஆண்டு சன் ரைசர்ஸ் அணி 250 ரன்கள் வரை அடித்தாலும் பந்துவீச்சில் 230 ரன்கள் வரை வாரி வழங்கினார்கள்.
ஆனால் இம்முறை ஆடம் ஸாம்பா, ராகுல் சாகர் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் ஷமி, ஹர்ஷல் படேல் போன்ற அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களும் அணிக்குள் வந்துள்ளதால் இந்த முறை நிச்சயம் சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு யூனிட் பலப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த முறையை காட்டிலும் இந்த முறை அந்த அணி எந்த அணியும் வீழ்த்தும் அணியாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : வெங்கடேஷ் ஐயரை கேப்டனாக்காமல் ரஹானேவை கேப்டனாக நியமிக்க இதுதான் காரணம் – வெங்கி மைசூர் விளக்கம்
என்னை பொறுத்தவரை இந்த தொடரிலும் அவர்கள் தங்களது அதிரடியான போக்கை மாற்றிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். எனவே நிச்சயம் இந்த தொடரிலும் அவர்கள் அதிரடியாகத்தான் விளையாடப்போவது உறுதி. இந்த ஆண்டு என்னை பொருத்தவரை சன் ரைசர்ஸ் அணியே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.