கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் அஜின்க்யா ரகானே இதுவரை பல்வேறு அணிகளுக்காக சாதாரண வீரராகவும், பல சீசன்களில் கேப்டனாகவும் பயணித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது பேட்டிங் ஃபார்ம் சரிவு காரணமாக எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க விரும்பாத நிலையில் சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுத்து மூன்றாவது வீரராக தொடர்ச்சியாக பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பினையும் வழங்கியது.
ரஹானேவை கேப்டனாக நியமித்தது ஏன்? : வெங்கி மைசூர் விளக்கம்
அப்படி சிஎஸ்கே அணியில் வாய்ப்பினை பெற்றதில் இருந்து தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் கடந்த சில சீசன்களாகவே மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி மீண்டும் லைன் லைட்டிற்குள் வந்தார். இப்படி சிஎஸ்கே அணிக்கு வந்த பிறகு அவருடைய கரியர் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
இவ்வேளையில் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி அவரை தங்களது அணியில் இருந்து விடுவித்தது. அதன் பின்னர் நடைபெற்று முடிந்த 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் கொல்கத்தா அணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரஹானே தற்போது அந்த அணியால் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா அணியில் ஏற்கனவே 23 கோடி கொடுத்து இளம்வீரர் வெங்கடேஷ் ஐயர் தக்க வைக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு பதிலாக ரகானேவை கேப்டனாக மாற்றியது ஏன்? என்பது குறித்து கொல்கத்தா அணியின் நிர்வாக இயக்குனர் வெங்கி மைசூர் சில வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
ஐபிஎல் என்பது சாதாரண தொடர் கிடையாது. அது கோப்பைக்காக பத்து அணிகள் போட்டி போடும் ஒரு மிக தீவிரமான தொடராகும். வெங்கடேஷ் ஐயர் ஒரு மிகச் சிறப்பான வீரர் தான். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஆனால் இது போன்ற ஒரு அழுத்தமான தொடரில் இளம் வீரரை கேப்டனனாக நியமிக்க போது அது அவருக்கு மிகவும் சவாலாகவும், அழுத்தமாகவும் இருக்கும்.
இதையும் படிங்க : உம்ரான் மாலிக் இப்படி ஒரே அடியாக காணாமல் போக இதுதான் காரணம் – டேல் ஸ்டெயின் கருத்து
ஆனால் அஜின்க்யாவை ரகானேவை பொருத்தவரை அவர் அனுபவம், முதிர்ச்சியும் கொண்டவர். அதுமட்டுமின்றி அவர் ஏற்கனவே ஐ.பி.எல் தொடர்களில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளதால் அவரால் இந்த அணியை நிச்சயம் கட்டுக்கோப்புடன் கொண்டு செல்ல முடியும். எனவே அவரது அனுபவத்தையும், முதிர்ச்சியையும் நம்பி தான் அவருக்கு கேப்டன் பதவியை வழங்கி இருக்கிறோம் என வெங்கி மைசூர் கூறியது குறிப்பிடத்தக்கது.