இதுக்கே ரசிகர்கள் கொதிச்சா எப்படி.. அங்கேயும் ரோஹித்துக்கு அப்றம் பாண்டியா தான்.. சித்து அதிரடி கருத்து

Navjot Sidhu 3
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது. குறிப்பாக 5 கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த ரோஹித் சர்மா மும்பை வெற்றிகரமான தனியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறார். ஆனாலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவரை கழற்றி விட்ட மும்பை பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.

மறுபுறம் பதவி கைக்கு வந்ததும் வேலையை ஆரம்பித்த பாண்டியா முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு ரோகித் சர்மாவை வற்புறுத்தினார். அதனால் ஏற்கனவே அதிருப்தியில் இருந்த மும்பை ரசிகர்கள் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தங்களுடைய கேப்டன் என்றும் பாராமல் ஹர்திக் பாண்டியாவுக்கு உச்சக்கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சித்து கருத்து:
இருப்பினும் பாண்டியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று பவுண்டரி எல்லையிலிருந்து ரசிகர்களை கேட்டுக் கொண்ட ரோஹித் சர்மா பெருந்தன்மையாக நடந்து கொண்டார். இந்நிலையில் மும்பை அணியை போலவே வருங்காலத்தில் இந்திய அணியிலும் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா ஒருநாள் மற்றும் 20 போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா தான் வருங்காலம். ரோஹித் சர்மா தற்போது 36 – 37 வயதை கடந்து விட்டார். அவரிடம் விளையாடுவதற்கு இன்னும் சில வருடங்கள் இருக்கிறது. அவர் சூப்பர் கேப்டன் மற்றும் அற்புதமான வீரர். என்னை கேட்டால் அவர் இயக்கத்தில் ஒரு கவிதை. அவரின் ஆட்டத்தை பார்க்கும் போதெல்லாம் நேரம் நின்று விடுவது போல் இருக்கும். ஆனால் உண்மையில் வருங்காலத்தை எதிர்நோக்கி யாரோ ஒருவர் புதிதாக பொறுப்பேற்க தயாராக இருக்க வேண்டும்.

- Advertisement -

“ஹர்திக் பாண்டியாவை நான் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக பரிந்துரைக்க மாட்டேன். ஆனால் ரோகித் சர்மா இல்லாத போது அவர் இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டார். எனவே பாண்டியா தான் இயற்கையாக உங்களுடைய அடுத்த கேப்டனுக்கு தேர்வாக இருக்கிறார். அதனாலேயே பிசிசிஐ அவரை துணை கேப்டனாக பெயரிட்டுள்ளது. பிசிசிஐ இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாக நிறைய திட்டங்களும் தேர்வுகளும் இருந்தன”

இதையும் படிங்க: குறைத்து மதிப்பிட்டு பேசிய ஹர்ஷா போக்லே.. நேருக்கு நேராக பதிலடி கொடுத்த சுப்மன் கில்

“அதன் முடிவில் தற்போது ஹர்திக் பாண்டியா தான் இயற்கையாக வெள்ளைப் பந்து அணியின் அடுத்த கேப்டனாக இருக்கிறார்” என்று கூறினார். முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பையிலேயே பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஆப்கானிஸ்தான் போட்டி தொடரில் காயமடைந்து அவர் வெளியேறியதால் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement