குறைத்து மதிப்பிட்டு பேசிய ஹர்ஷா போக்லே.. நேருக்கு நேராக பதிலடி கொடுத்த சுப்மன் கில்

- Advertisement -

கோடைகாலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 24வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வீழ்த்தியது. ஜெய்ப்பூரில் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 68* (38) ரியன் பராக் 76 (48) ரன்கள் எடுத்த உதவியுடன் 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதைத் துரத்திய குஜராத்துக்கு கேப்டன் சுப்மன் கில் 72 (44) ராகுல் திவாட்டியா 22 (11) ரசித் கான் 24* (11) ரன்கள் எடுத்து கடைசி பந்தில் திரில் வெற்றி பெற வைத்தனர். அதனால் குஜராத் தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. மறுபுறம் குல்தீப் சென் 3, சஹால் 2 விக்கெட்டுகள் எடுத்தும் ராஜஸ்தான் முதல் தோல்வியை பதிவு செய்தது.

- Advertisement -

கில் பதிலடி:
முன்னதாக இந்த போட்டியில் 197 ரன்களை துரத்திய குஜராத்துக்கு கேப்டன் சுப்மன் கில் ஆரம்பம் முதலே நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடி வெற்றிக்கு போராடினார். ஆனால் எதிர்ப்புறம் சாய் சுதர்சன் 35, மேத்யூ வேட் 4, அபினவ் மனோகர் 1, விஜய் சங்கர் 16, சாருக்கான் 14 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர்.

இருப்பினும் எதிர்ப்புறம் தொடர்ந்து ராஜஸ்தானுக்கு சவாலை கொடுத்த சுப்மன் கில் 6 பவுண்டரி 2 சிக்ஸரை பறக்க விட்டு 163.64 ஸ்ட்ரைக் ரேட்டில் போராடியதால் குஜராத்தை வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முக்கிய நேரத்தில் அவுட்டான அவருக்குப் பின் வந்த ஷாருக்கான் 14 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் குஜராத்தின் வெற்றி கேள்விக்குறியானது.

- Advertisement -

நல்லவேளையாக கடைசி 12 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்ட போது ரசித் கான் – ராகுல் திவாட்டியா ஆகியோர் தில்லாத நின்று குஜராத்தை வெற்றி பெற வைத்தனர். அந்த நிலையில் போட்டி முடிந்த பின் “நீங்கள் ஃபினிஷிங் செய்யாமல் அவுட்டானதால் குஜராத் தோற்கும்” என்று எதிர்பார்த்ததாக ஆட்டநாயகன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சுப்மன் கில்லிடம் பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே சொன்னார்.

இதையும் படிங்க: களத்தில் விதிமுறையை மீறிய ராஜஸ்தான்.. முதல் தோல்வியுடன் சஞ்சு சாம்சனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வெல் டன். இன்றிரவு நீங்கள் 2 புள்ளிகளை பெற்றீர்கள். இருப்பினும் நீங்கள் அதை மிகவும் தாமதமாக விட்டு விட்டீர்கள் என்று எங்களில் சிலர் நினைத்தோம். ஆனால் இன்று உங்களுக்கு நன்றாக முடிந்தது” என்று கூறினார். அதற்கு சுப்மன் கில் “உங்களுக்கு நன்றி. குஜராத் டைட்டன்ஸ் விளையாடும் போது அப்படி நினைக்காதீர்கள்” என்று பதிலளித்தார். அதாவது போட்டி முடியும் வரை எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று அவருக்கு நேருக்கு நேராக சுப்மன் கில் பதிலடி கொடுத்தது வைரலாகி வருகிறது.

Advertisement