- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இது துபாய்க்கு தகுந்த இந்திய அணி இல்லை.. அதுல 4 பேர் எதுக்கு? சிராஜ் இருந்துருக்கனும்.. சித்து பேட்டி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் சஞ்சு சாம்சன், உள்ளூர் தொடரில் அசத்தும் கருண் நாயர் போன்ற வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படாதது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதே போல முதன்மை பவுலரான முகமது சிராஜ் தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி துபாயில் விளையாடுவதற்கு தகுந்தார் போல் தேர்ந்தெடுக்கப்படவில்லை என முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து கூறியுள்ளார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை போல தற்போதைய அணியில் தேவையின்றி 4 ஸ்பின்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால் துபாயில் ஸ்பின்னர்களுக்கு அதிக சாதகம் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சிராஜ் தேர்வு:

அது போன்ற சூழ்நிலையில் சிராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறும் சித்து இது பற்றி பேசியது பின்வருமாறு. “சாம்பியன்ஸ் கோப்பை இந்திய அணியை பார்க்கும் போது ஆல் ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகிய 4 தரமான ஆல் ரவுண்டர்கள் உள்ளார்கள்”

“இந்த அணி கடினமான சூழ்நிலைகளில் நிற்கக்கூடிய திறனை கொண்டுள்ளது. இருப்பினும் நான் இந்திய அணியை தேர்வு செய்ய வேண்டிய நிலை வந்தால் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் 3 ஸ்பின்னர்களை தேர்வு செய்வேன். கண்டிப்பாக என்னுடைய அணியில் முகம்மது சிராஜ் இருப்பார். கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கு நாம் 4 ஸ்பின்னர்களை அழைத்துச் சென்றோம்”

- Advertisement -

எக்ஸ்ட்ரா ஸ்பின்னர்:

“ஆனால் அங்கே சஹாலுக்கு கடைசி வரை வாய்ப்பு கொடுக்கவில்லை. சார்ஜா, துபாய் போன்ற இடங்களில் இருக்கும். சூழ்நிலைகளை பார்த்தால் அங்கே ஸ்பின்னர்கள் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார்கள். அந்த வகையில் இந்திய அணியில் அங்கேயும் இங்கேயும் கொஞ்சம் குறைகள் இருக்கிறது”

இதையும் படிங்க: 127 ரன்ஸ்.. இந்தியாவை போல ரூட்டை மாற்றி.. 177.2 ஓவரில் வெ.இ அணியை முடித்த பாகிஸ்தான் வெற்றி

“மற்ற படி இது சமநிலை நிறைந்த அணியாகவே இருக்கிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து வீரர்களும் விளையாட உள்ளனர். அந்தத் தொடரிலேயே இந்திய அணியின் பலம் பலவீனங்கள் ஓரளவு தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -