அமெரிக்காவிடம் தோல்வி.. பாகிஸ்தானை இந்தியா காமெடியா நினைக்கக்கூடாது.. மக்கள் அதுக்கு சமமா நினைப்பாங்க.. சித்து

Navjot Sidhu
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் அந்தப் போட்டியில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெரும்பாலும் உலகக் கோப்பைகளில் வென்றுள்ள இந்தியா இந்த தொடரிலும் அயர்லாந்தை வீழ்த்தி தங்கள் பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளது.

மறுபுறம் தங்களுடைய முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் தோற்ற பாகிஸ்தான் மிகப்பெரிய அவமானத்தை சந்தித்தது. அத்துடன் சமீப காலங்களில் அயர்லாந்து போன்ற இரண்டாவது தர அணிகளிடம் பாகிஸ்தான் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியது. எனவே அமெரிக்காவிடமே தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் கண்டிப்பாக இம்முறையும் தோல்வியை சந்திக்கும் என்று இந்திய ரசிகர்கள் நகைசுவையாக கிண்டலடித்து வருகின்றனர்.

- Advertisement -

ஹீரோ டூ ஜீரோ:
இந்நிலையில் அமெரிக்காவிடம் தோற்றதால் பாகிஸ்தானை குறைத்து எடை போட வேண்டாம் என்று இந்தியாவை முன்னாள் நவ்ஜோத் சித்து எச்சரித்துள்ளார். இருப்பினும் தற்சமயத்தில் பாகிஸ்தானை விட வலுவாக இருப்பதால் இந்தியா வெல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக வெல்வதை உலகக் கோப்பையை வென்றதற்கு நிகராக மக்கள் கொண்டாடுவார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“இதற்கு முந்தைய 7 போட்டிகளில் வென்றிருந்தாலும் பாகிஸ்தானுக்கு எதிராக இம்முறை நீங்கள் வெற்றி வெற்றி பெறாமல் போனால் ஹீரோவிலிருந்து ஜீரோவாக மாறிவிடுவீர்கள். அது மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டிகளின் அம்மாவாகும். தற்சமயத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு சாதகம் அதிகமாகவே இருக்கிறது. ஏனெனில் பாகிஸ்தான் தங்களுடைய முந்தைய போட்டிகளில் அசத்தவில்லை”

- Advertisement -

“இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்த அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக தோற்றனர். மறுபுறம் அனைத்து இந்திய வீரர்களும் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். ஆனால் நியூயார்க் நகரில் உள்ள பேட்டிங் சூழ்நிலைகள் பற்றி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு தெரியாது. அந்த வகையில் இந்தியாவுக்கு சாதகம் இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் ஒன்றுமில்லை. நீங்கள் தனி நபர்களை சார்ந்திருக்க முடியாது. இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் மிகவும் சமநிலையுடன் இருக்கிறது”

இதையும் படிங்க: அவரிடமும் வீக்னெஸ் இருக்கு.. அதை வெச்சு அவுட்டாக்கி இந்தியாவை வீழ்த்துவேன்.. முகமது அமீர் பேட்டி

“ஆனால் போட்டி நாளில் பாகிஸ்தான் எதையும் செய்யும். இங்கே தோல்விகளை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது பழிவாங்கும் கலாச்சாரம். தோல்வியை விழுங்கினால் அது கசப்பல்ல. ஆனால் இங்கே யாரும் தோல்வியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் தோற்கலாம் ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக தோற்கக்கூடாது. பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றால் உலகக் கோப்பையை வென்றதற்கு சமமாக மக்கள் கருதுவார்கள்” என்று கூறினார்.

Advertisement