
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா சமீபத்திய பேட்டியில் விராட் கோலி மற்றும் தோனியை விமர்சித்திருந்தார். குறிப்பாக தமக்கு முன்னாள் கேப்டன் தோனி மற்றும் விராட் கோலி போதுமான வாய்ப்பு கொடுக்கவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். அத்துடன் ரோகித் சர்மா முதல் நாளில் பார்த்தது போலவே இப்போதும் அப்படியே இருப்பதாக அவர் கூறியிருந்தார்.
ஆனால் புகழ் மற்றும் அதிகாரம் வந்த பின் தலைகீழாக மாறிய விராட் கோலி தன்னிடம் பேசுவது கூட இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார். அதை விட 2023 ஐபிஎல் தொடரில் நவீன்-உல்-ஹக்கை ஜூனியர் என்று பார்க்காமல் விராட் கோலி திட்டியதாகவும் அமித் மிஸ்ரா தெரிவித்திருந்தார். அதனால் தோனி மற்றும் சச்சினுக்கு நிகரான மதிப்பை விராட் கோலி பெற மாட்டார் என்றும் மிஸ்ரா கூறியிருந்தார்.
மிஸ்ராவுக்கு பதிலடி:
இந்நிலையில் அன்றைய நாளில் போட்டி நடைபெற்ற பரபரப்பான சூழ்நிலையில் விராட் கோலியும் தாமும் மோதிக்கொண்டதாக நவீன்-உல்-ஹக் கூறியுள்ளார். அத்துடன் களத்தில் சண்டை போட்டாலும் நாங்கள் எதிரி அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் கடந்த உலகக் கோப்பையில் தாமும் விராட் கோலியும் பகையை மறந்து அந்த பிரச்சனையை பேசி தீர்த்து விட்டு நண்பர்களாக மாறியதாகவும் நவீன் கூறியுள்ளார்.
அந்த வகையில் அமித் மிஸ்ராவின் கருத்துக்கு பதிலடி தெரிவிக்கும் வகையில் இது பற்றி நவீன் பேசியது பின்வருமாறு. “அது போட்டியின் பரபரப்பில் நடந்த விஷயமாகும். விராட் கோலி அவருடைய அணிக்கு விளையாடினார். நான் என்னுடைய அணிக்காக விளையாடினேன். அந்த வகையில் என்னுடைய அணிக்காக அல்லது நாட்டுக்காக விளையாடினால் நான் என்னுடைய அனைத்தையும் கொடுப்பேன்”
“எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் போட்டியின் முடிவில் நாங்கள் அனைவருமே வீரர்கள் நண்பர்கள். நாங்கள் அந்த சண்டைகளை களத்திலேயே விட்டு செல்வோம். எதையும் எடுத்துச் செல்ல மாட்டோம். அது போல கடந்த உலகக் கோப்பையில் நாங்கள் அதை முடித்து விட்டோம்” என்று கூறினார். முன்னதாக 2023 கோப்பையில் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நவீனுக்கு இந்திய ரசிகர்கள் உச்சகத்தை எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பழைசையே செய்யாம இந்தியாவுக்காக இதை செஞ்சா சரி தான்.. பயிற்சியாளர் கம்பீர் நியமனம் பற்றி கபில் தேவ்
அப்போது அவரை விமர்சித்து கிண்டலடிக்க வேண்டாம் என்று விராட் கோலி ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். அத்துடன் நவீன்-உல்-ஹக்கிடம் கை கொடுத்து சிரித்து பேசிய விராட் கோலி பிரச்சனையை முடித்து வைத்தார். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் மோதிக்கொண்ட அவர்கள் நாட்டுக்காக விளையாடிய போது நட்பாக மாறியது குறிப்பிடத்தக்கது.