பழைசையே செய்யாம இந்தியாவுக்காக இதை செஞ்சா சரி தான்.. பயிற்சியாளர் கம்பீர் நியமனம் பற்றி கபில் தேவ்

Kapil Dev 3
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து வென்றது. அந்த வெற்றியுடன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர். அதே போல ஒரு வீரராக வெல்லாத உலகக் கோப்பையை பயிற்சியாளராக வென்று ஜாம்பவான் ராகுல் டிராவிட் விடைபெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

இதைத் தொடர்ந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்த அவர் 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை தோனி தலைமையில் இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினார். அத்துடன் ஐபிஎல் தொடரிலும் 2 கோப்பைகளை கேப்டனாக வென்றுள்ள அவர் இந்த வருடம் ஆலோசகராக கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவினார்.

- Advertisement -

கபில் தேவ் வாழ்த்து:
அந்த வகையில் மிகப்பெரிய அனுபவத்தை கொண்டுள்ளதால் அவரை பிசிசிஐ அடுத்த பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்நிலையில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்கும் கௌதம் கம்பீருக்கு முன்னாள் கேப்டன் கபில் தேவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முந்தைய பழைய செயல்பட்டதை விட இந்திய அணியிடமிருந்து கம்பீர் இன்னும் சிறந்த செயல்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை கௌதம் கம்பீர் எடுத்துக்கொண்டால் அவருக்கும் அணிக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன் செய்ததை விட அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். எனவே அவருடைய தலைமையில் சிறப்பாக செயல்பட இந்திய வீரர்களையும் நான் வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து 2027 டிசம்பர் மாதம் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் செயல்பட உள்ளார். இந்த காலகட்டங்களில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா விளையாட உள்ளது. அதை விட மிகவும் முக்கியமான 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா சொந்த மண்ணில் தக்க வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விடைபெறும் விராட், ரோஹித்.. கில், ருதுராஜ், ஜெய்ஸ்வால் முன்னேற்றம்.. வருங்காலத்தை சொல்லும் தரவரிசை

அத்துடன் 2027 உலகக் கோப்பை வெல்வதே தற்போது பயிற்சியாளராக பொறுப்பேற்கும் கம்பீரின் முதன்மை இலக்காகும். எனவே மேற்கண்ட 4 ஐசிசி தொடர்களில் அவரது வழிகாட்டுதலில் இந்தியா குறைந்தது 2 கோப்பையாவது வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்த நிலையில் அடுத்ததாக நடைபெறும் இலங்கை தொடரிலிருந்து இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement