சர்வதேச கிரிக்கெட்டுக்கு நீங்க லாய்க்கி இல்ல – சேவாக்கை ஸ்லெட்ஜ் செய்து அவுட்டாக்கிய 2005 பின்னணியை பகிர்ந்த முன்னாள் பாக் வீரர்

Naved Ul Hasan IND vs PAK
- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான திகழும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சனை காரணமாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவதை தவிர்த்து ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. அதனால் இப்போதெல்லாம் இவ்விரு நாடுகள் மோதும் தரமான போட்டிகளை பார்ப்பதற்கு சுமார் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி வெற்றி பெறுவதற்கு ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.

அந்த வரிசையில் கடந்த 2005ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4 – 2 என்ற கணக்கில் வென்ற பாகிஸ்தான் கோப்பையை வென்றது. அந்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் வீரர் நவீத்-உல்-ஹசன் தொடர் நாயகன் விருது வென்று இந்தியாவை வீழ்த்துவதற்கு முக்கிய பங்காற்றினார். குறிப்பாக முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற போதிலும் கடைசி 4 போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் தொடரை வென்று அசத்தியது.

- Advertisement -

சேவாக்கிற்கு பதிலடி:
இந்நிலையில் அத்தொடரின் 3வது போட்டியில் அதிரடியாக விளையாடிய சேவாக் 85 ரன்கள் குவித்து இந்தியா 300 ரன்களை தாண்ட வைத்து பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலை கொடுத்த போது அவரை ஸ்லெட்ஜிங் செய்து அவுட்டாக்கியதை பற்றி நவீன்-உல்-ஹசன் நினைவு கூர்ந்துள்ளார். குறிப்பாக தம்முடைய முதல் ஓவரின் முதல் பந்தையே தவற விட்டதால் இதுவே பாகிஸ்தானாக இருந்தால் நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியிருக்க மாட்டீர்கள் இந்தியாவில் இருப்பதால் வாய்ப்பு பெற்றதாக சேவாக்கை வம்பிழுத்தது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“நாங்கள் இந்தியாவில் ஒரு போட்டியில் விளையாடினோம். அதில் சேவாக் 85 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அதே தொடரில் தான் ஷாஹித் அப்ரிடி சதமடித்திருந்தார். இருப்பினும் முதலிரண்டு போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றதால் நாங்கள் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கினோம். அந்த நிலையில் நடைபெற்ற 3வது போட்டியிலும் சேவாக் எங்களை சரமாரியாக அடித்து நொறுக்கினார்”

- Advertisement -

“குறிப்பாக ஷாஹித் அப்ரிடியை அடுத்தடுத்த சிக்ஸர்களாக பறக்க விட்ட அவர் இந்தியா 300 ரன்கள் நெருங்க உதவினார். அந்த வகையில் எங்கள் பவுலர்கள் அனைவரும் அவரிடம் அடி வாங்கினர். அப்போது நான் இன்சமாமிடம் எனக்கு ஒரு ஓவர் கொடுக்குமாறு கேட்டேன். அவரும் அனைத்து பவுலர்களும் அடி வாங்குவதால் நீயும் ஒரு ஓவர் முயற்சித்துப் பார் என்று சொல்லி வாய்ப்பு கொடுத்தார். அதில் நான் வீசிய முதல் மெதுவான பவுன்சர் பந்தை சேவாக் கணிக்க தவறி அடிக்காமல் விட்டார்”

“அப்போது அவருடைய அருகே சென்ற நான் “உங்களுக்கு எப்படி விளையாடுவது என்பது தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் பாகிஸ்தானில் இருந்திருந்தால் சர்வதேச அணையில் விளையாடியிருக்க மாட்டீர்கள்” என்று சொன்னேன். அதற்கு அவரும் சில வார்த்தைகளை சொன்னார். ஆனால் அதையும் தாண்டி அவருக்கு நான் வார்த்தைகளாலேயே பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தினேன். அதைத்தொடர்ந்து அடுத்த பந்தை வீசுவதற்கு முன்பாக இன்சாமிடம் அவர் இப்போது அவுட்டாவார் பாருங்கள் என்று சொன்னேன்”

இதையும் படிங்க:IND vs WI : நீங்க நினைக்கிற மாதிரி இல்ல – கலாய்க்கும் இந்திய ரசிகர்களே, விராட் – ரோஹித்தின் இந்த ரியாக்சனை கவனிச்சிங்களா?

“அதே போலவே பேக் ஆஃப் தி ஹேண்ட் வாயிலாக நான் வீசிய மெதுவான பந்தை சேவாக் அதிரடியாக அடிக்க முயற்சித்து அவுட்டானார். அதுவே இறுதியில் அந்த போட்டியில் நாங்கள் வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது” என்று கூறினார். இருப்பினும் அவர் குறிப்பிடும் தொடரில் சேவாக் எந்த போட்டியிலும் 85 ரன்களில் அவுட்டாகவில்லை. மாறாக 2வது போட்டியில் யாராலும் மறக்க முடியாத வகையில் தோனி 148 (123) ரன்கள் எடுத்த நிலையில் சேவாக் அவரிடம் 74 (40) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அந்த போட்டியில் இந்தியா 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement