IND vs WI : நீங்க நினைக்கிற மாதிரி இல்ல – கலாய்க்கும் இந்திய ரசிகர்களே, விராட் – ரோஹித்தின் இந்த ரியாக்சனை கவனிச்சிங்களா?

Virat Kohli Rohit Sharma
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 3வது நாள் முடிவில் 312/2 ரன்களை எடுத்துள்ள இந்தியா 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் வெறும் 150 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அலிக் அதனேஷ் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகள் சாய்ந்தார்.

அதை தொடர்ந்து களமிறங்க இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மாவுடன் புதிய தொடக்க வீரராக விளையாடிய ஜெய்ஸ்வால் அறிமுக போட்டியில் முதல் பந்திலேயே பவுண்டரியை பறக்க விட்டு தம்முடைய கேரியரை சிறப்பாக துவங்கினார். அந்த வகையில் ஆரம்பம் முதலே தடுமாறாமல் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு வளைந்து கொடுக்காமல் சிம்ம சொப்பனமாக மாறி 229 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன் வாயிலாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 200 ரன்கள் குவித்து அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனை படைத்த அவர்களில் கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்து 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சவாலான வெஸ்ட் இண்டீஸ்:
அதைத்தொடர்ந்து வந்த சுப்மன் கில் 6 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் அசத்திய ஜெயஸ்வால் அறிமுக போட்டியில் சதமடித்த 14வது இந்திய வீரராக சாதனை படைத்து 143* ரன்கள் எடுத்தார். அவருடன் மாலை நேரத்தில் தன்னுடைய தரத்தை காட்டிய விராட் கோலி 36* ரன்கள் எடுத்து இந்த போட்டியில் இந்தியாவை வலுப்படுத்தியுள்ளனர்.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்தித்ததால் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் என்ன பயன் என்று விமர்சித்த ரசிகர்கள் 2023 உலகக் கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறி கத்துக்குட்டியாக மாறியுள்ள வெஸ்ட் இண்டீஸை அடித்து சாதனை படையுங்கள் என இந்திய அணியினரை கலாய்த்தனர். அதற்கேற்றார் போல் தற்போது இந்தியா சிறப்பாக செயல்பட்டு சாதனைகளை படைத்து வருவதால் பாராட்டுவதற்கு பதிலாக இந்திய ரசிகர்களே சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். ஆனால் உண்மையாகவே இந்த போட்டியில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் வெஸ்ட் இண்டீஸ் மிகவும் சவாலாக பந்து வீசி வருகிறது என்றே சொல்லலாம்.

- Advertisement -

குறிப்பாக தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா கத்துக்குட்டியாக கருதப்படும் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை எளிதாக அடிக்க முடியாமல் ஆரம்பம் முதலே மெதுவாக பேட்டிங் செய்தார். அந்த வகையில் கடுமையாக போராடி 220 பந்துகளை எதிர்கொண்டு ஒரு வழியாக 100 ரன்களை தொட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தம்முடைய மிகவும் மெதுவான சதத்தை அடித்து போராட்டமான இன்னிங்ஸ் விளையாடினார். இதற்கு முன் கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 204 பந்துகளில் 100 ரன்கள் எடுத்ததே ரோகித் சர்மாவின் முந்தைய மெதுவான சதமாகும்.

அதே போல அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் எளிதாக ரன்கள் எடுக்க முடியாத அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் மிகவும் துல்லியமாக பந்து வீசினார்கள். சொல்லப்போனால் ஐபிஎல் 2023 தொடர் உட்பட சமீப காலங்களில் ரோகித் சர்மா தடுமாறினாலும் விராட் கோலி சதமடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட அவரே ரோகித்தை விட இந்த போட்டியில் மிகவும் திணறலான பேட்டிங்கை வெளிப்படுத்தும் அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தரமாக இருந்தது.

இதையும் படிங்க:INDvsWI : ஷிகர் தவானின் மாபெரும் சாதனையை அறிமுகப்போட்டியில் முறியடிக்க காத்திருக்கும் – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

அதன் காரணமாக 85 பந்துகள் வரை சிங்கிள் மட்டுமே எடுத்த விராட் கோலி ஒரு வழியாக 86வது பந்தில் பவுண்டரி அடித்து அதை சதமடித்தது போல் மிகவும் மகிழ்ச்சியுடன் கையை தூக்கி கொண்டாடினார். மொத்தத்தில் ரசிகர்கள் நினைக்காத அளவுக்கு இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தரமாகவே இருக்கிறது என்றால் மிகையாகாது.

Advertisement