200 ரூபாய்க்கு கிரிக்கெட் விளையாடிய நான் இன்று இந்திய அணியில் தேர்வாக இவரே காரணம் – நவதீப் சைனி

Navdeep
- Advertisement -

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று முன்தினம் மும்பையில் அறிவிக்கப்பட்டது. இதில் இம்முறை ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்றுக்கும் தனித்தனி அணி அறிவிக்கப்பட்டது.

Saini 1

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடரில் புதுமுக வீரராக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நவ்தீப் சைனி இதுவரை 13 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் தனது கிரிக்கெட் பயணத்தை பற்றி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் உள்ளூரில் ஒரு போட்டிக்கு 200 ரூபாய் பெற்றுக் கொண்டு விளையாடி வந்தேன்.

எனது திறமையை கண்டு பிடித்து ஊக்கப்படுத்தியவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தான். டெல்லி அணிக்காக வலைப்பயிற்சியில் நான் ஈடுபடும் போது எனக்கு ஷூ வாங்கிக் கொடுத்ததும் அவர்தான். பின்னாளில் என்னை தவறாமல் பயிற்சியில் பங்கு பெறுமாறும் தொடர்ந்து நீ பயிற்சி பெற்றுக் கொண்டே இரு ஒருநாள் இந்திய அணியில் நீ இடம் பிடிப்பாய் என்று எனக்கு ஆதரவு தெரிவித்தார்.

saini

அவர் அளித்த ஊக்கமே என்னை இந்த அளவுக்கு சிறப்பாக விளையாட வைத்தது. என்னுடைய ஹரியானா மாநிலத்தில் கூட என்னை யாருக்கும் தெரியாது. ஆனால் கம்பீர் என்னை கண்டுபிடித்து டெல்லி அணிக்காக விளையாட வைத்தார். என்னுடைய திறமைகள் மீது அதிக நம்பிக்கை வைத்த அவரை நான் என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் அவர் அளித்த ஊக்கமே இன்று நான் இந்திய அணியில் இடம்பிடிக்கும் வரை என்னை அழைத்து வந்துள்ளது என்று கூறினார் சைனி.

Advertisement