நேற்றைய போட்டியில் பங்கேற்றும் வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த இந்திய வீரர் – இதை கவனிச்சீங்களா ?

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆனது தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

INDvsSL

- Advertisement -

அவருடன் தொடர்பில் இருந்த 8 இந்திய வீரர்களையும் தனிமைப்படுத்திய நிர்வாகம் வேறு வழி இன்றி இருக்கும் வீரர்களை அணியில் இணைத்து நேற்றைய போட்டியில் களம் இறக்கியது. அதன்படி நேற்றைய போட்டியில் ஐந்து பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்களை சேர்க்காமல் 20 ஓவர்களில் முடிவில் 132 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதுவே இந்திய அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாகவும் அமைந்தது. இருப்பினும் 6 பந்துவீச்சாளர்களை வைத்திருந்த இந்திய அணி 5 பந்து வீச்சாளர்கள் மட்டும் பயன்படுத்தி இறுதி வரை இலங்கை அணிக்கு எதிராக கடுமையான போராட்டத்தை அளித்து இறுதி ஓவரிலேயே தோல்வி அடைந்தது. இந்த இந்திய அணியின் இந்த சிறப்பான போராட்டத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

chahar

மேலும் இந்த போட்டியில் 4 வீரர்கள் அறிமுகம் ஆகியிருந்த நிலையில் ஒரு வீரர் மட்டும் பந்துவீச்சில் ஒரு பவுலராக இருந்தும் ஒரு பந்து கூட வீச வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோன்று பேட்டிங்கிலும் ஒரே பந்து மட்டும்தான் விளையாடினார். மொத்தத்தில் அவர் நேற்றைய போட்டியில் விளையாடியது பலருக்கு தெரியாமல் போக வாய்ப்பு இருக்கும்.

saini

அந்த வீரர் யாரெனில் நவ்தீப் சைனி தான். வேகப்பந்து வீச்சாளரான அவர் நேற்றைய போட்டியில் ஒரு ஓவர் கூட வீசவில்லை. அதேபோன்று பேட்டிங்கிலும் ஏழாவது வீரராக களமிறங்கி அவர் ஒரே பந்தை மட்டுமே சந்தித்தார். அது தவிர மற்றபடி அவர் அணியில் வெறுமனவே இருந்தார் என்றே கூறலாம்.

Advertisement