ஷமிக்கு ஓய்வு கொடுத்ததுக்கு பதில் இவரை அணியில் இருந்து நீக்கி இருக்கலாம் – நல்லா இருந்திருக்கும் INDvsNZ

shami
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் இன்று துவங்கியது.

shami

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டு முடிந்துள்ளது. இந்த டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் கோலி இந்திய அணி முதலில் பந்து வீசும் என்று முடிவு செய்துள்ளார். மேலும் இந்திய அணியில் இராது மாற்றங்களாக வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஷமிக்கு பதிலாக சைனியும், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கு பதிலாக சாஹலும் அணியில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த போட்டியில் பவுலிங்கில் ரன்களை வாரி ஷர்துல் தாகூர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சைனியம், சாஹலும் வருவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அனைவரது கணிப்புக்கும் வித்யாசமாக அணியின் சிறப்பான பந்து வீச்சாளர் முகமது சமி டெஸ்ட் தொடருக்கு தயார் ஆவதற்காக ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக சைனி வந்துள்ளார்.

முறைப்படி பார்த்தால் தாகூர் அணியில் இருந்து நீக்கப்பட்டு சைனி வந்திருக்க வேண்டும். ஏனெனில் முக்கியமான இந்த போட்டியில் இந்திய அணி தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் ஷமி கட்டாயம் இந்த போட்டியில் என்பது இருந்திருக்க வேண்டும். கோலியின் இந்த முடிவு எந்த அளவிற்கு செயல்படும் என்று போட்டியின் முடிவில் தெரியும். இதுவரை தாகூர் 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உட்பட 16 ரன்களை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement