நெட் பவுலரா தான் ஆஸ்திரேலியா வந்தேன். எனக்கு விளையாட சேன்ஸ் கிடைச்சது இப்படித்தான் – நடராஜன் வெளிப்படை

Nattu-1
- Advertisement -

சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இருப்பினும் இந்த போட்டியில் தமிழக வீரரான நடராஜனின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஒரு பக்கம் வாஷிங்டன் சுந்தர் நான்கு ஓவர் வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்த மறுபக்கம் தனது சிறப்பான பவுலிங் மூலம் 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து முக்கிய வீரரான மேக்ஸ்வெல் கிளீன் போல்ட் செய்து ஆட்டமிழக்க வைத்தார். நடராஜன் இந்தத் தொடர் முழுவதுமே மூன்று போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர் நாயகன் விருது கிடைக்கும் என்று எதிர் பார்த்த தருணத்தில் ஹார்டிக் பாண்டியாவிற்கு அந்த விருது வழங்கப்பட்டது.

nattu 1

- Advertisement -

இருப்பினும் இந்த தொடர் முழுவதுமே நடராஜன் தன் மீது இருந்த எதிர்பார்ப்பை முழுவதுமாக தீர்த்து வைத்துள்ளார் நடராஜன். இந்நிலையில் இந்த பேட்டி முடிந்து மைதானத்தில் இருந்த அவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான முரளி கார்த்திக் பேட்டி கண்டார். அப்பொழுது தான் எவ்வாறு இந்திய அணிக்குள் வந்தேன் என்றும் இப்பொழுது எப்படி சிறப்பாக விளையாடினேன் என்பது குறித்தும் நடராஜன் தமிழில் தெளிவாக பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது :

இந்த தொடரில் வெற்றி பெற்று இந்திய அணியுடன் நிற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது என்னுடைய இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தை இல்லை. நான் ஆஸ்திரேலியாவிற்கு ஐபிஎல் தொடரை முடித்து விட்டு வரும் பொழுது நெட் பவுலராகவே அணியில் இணைந்து இருந்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக 2 வீரர்கள் காயம் காரணமாக எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. முதலில் வருண் சக்கரவர்த்தி அணியில் காயமடைந்ததால் எனக்கு டி20 தொடரில் வாய்ப்பு கிடைத்தது.

nattu 1

அது மட்டுமின்றி ஒருநாள் போட்டியின் போது சைனிக்கு முதுகு வலி ஏற்பட்டதால் என்னை விளையாட வைத்தார்கள். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நான் மிகச் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய பலம் என்ன என்பதை அறிந்து அதனை சரியாக மைதானத்தில் பயன்படுத்தினேன். யார்க்கர் மற்றும் ஸ்லோ கட்டர் என என்னால் பந்துகளை மாற்றி திட்டத்திற்கு ஏற்றாற்போல் வீச முடிந்தது.

- Advertisement -

அதுமட்டுமின்றி கேப்டன் விராட் கோலியிடம் மைதானத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது ? வேகமாக இருக்கிறதா ? ஸ்லோவாக இருக்கிறதா ? என்பது போல அடிக்கடி கேட்டுக் கொள்வேன் அதுமட்டுமின்றி விக்கெட் கீப்பர் ராகுலும் எனக்கு மைதானத்தின் தன்மையை விளக்கி கூறினார். அவர்களின் அறிவுரையின் படியே எனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து நான் பவுலிங் செய்தேன். எதிர்பார்த்தபடி இந்த தொடரும் எனக்கு சிறப்பாக அமைந்தது. ஐபிஎல் தொடரில் இருந்த பார்மை தொடர விரும்பினேன்.

Nattu

அந்த வகையில் இந்திய அணிக்காக விளையாடியதும், தற்போது இங்கு நிற்பதும் எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணியின் நிர்வாகம் மற்றும் அணியில் உள்ள வீரர்கள் கேப்டன், பயிற்சியாளர் என அனைவருமே என்னை ஆதரித்து எனக்கு ஊக்கத்தை கொடுத்தனர். அவர்களின் ஆதரவும், ரசிகர்களின் ஆதரவும் என்னை திறம்பட செயல்பட வைத்தது என நடராஜன் நெகிழ்ச்சியாக பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement