இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது. அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் நேற்று கான்பரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் 51 ரன்களையும், இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தும் அசத்தினர். மொத்தத்தில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. அதன்பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 150 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பாக துவக்க வீரர் பின்ச் மற்றும் ஷார்ட் ஆகியோர் முறையே 35, 34 ரன்கள் அடித்தன.ர் இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோன்று ஜடேஜாவுக்கு பதிலாக பந்துவீசிய சாஹல் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டி20 தொடரில் இந்திய அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் போது இந்திய அணிக்காக அறிமுகமாகிய நடராஜன் தனது ஒருநாள் அறிமுக தொப்பியை கேப்டன் கோலியிடம் இருந்து பெற்றார். அந்த போட்டியில் 10 ஓவர் வீசிய அவர் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் அறிமுகமான நடராஜன் அவரது அறிமுக தொப்பியை இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா விடமிருந்து பெற்றார்.
Onwards and upwards!
After his ODI debut, @Natarajan_91 will today play his maiden T20I game for #TeamIndia. He gets his 🧢 from @Jaspritbumrah93 #AUSvIND pic.twitter.com/hfDsw2Tycu
— BCCI (@BCCI) December 4, 2020
இந்த நிகழ்வினை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு உள்ளது. மேலும் தான் அறிமுகமான முதல் டி20 போட்டியிலேயே 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி நேற்று நடராஜன் ஹீரோவாக நடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த வருவது குறிப்பிடத்தக்கது.