நடராஜனுக்கு சப்போர்ட் செய்யும் 4 முக்கிய புள்ளிகள். வேர்ல்டு கப் டீம்ல இடம் கன்பார்ம் – விவரம் இதோ

Nattu-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 3 ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று தொடரை இழந்தது. இதையடுத்து ஆக்ரோஷத்துடன் விளையாடிய இந்திய அணி டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணி விளையாடி 6 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனின் பந்து வீச்சும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. நடராஜன் விளையாடிய நான்கு போட்டிகளில் மொத்தம் 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

nattu 1

- Advertisement -

ஹர்திக் பாண்டியா தனக்கு வழங்கப்பட்ட தொடர் நாயகன் கோப்பையையும் விராட்கோலி தொடரை வென்ற கோப்பையையும் நடராஜனிடம் கொடுத்து சிறப்பித்தனர். நடராஜன் நடப்பு ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னரின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் மட்டும் இடம் பெற்ற நடராஜன் தற்போது டெஸ்ட் தொடருக்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டு வலைப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியில் இருக்கும் மூன்று நட்சத்திர வீரர்களும் ஒரு பயிற்சியாளரும் இணைந்து நடராஜனை தொடர்ச்சியாக ஊக்குவித்து வருகின்றனர். முதலில் ஹர்டிக் பாண்டியா தனக்கு வழங்கப்பட்ட தொடர் நாயகன் கோப்பையை நடராஜனிடம் கொடுத்து ஊக்குவித்துள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.

Nattu

அடுத்ததாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நடராஜன் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார். நடராஜன் வருங்காலத்தில் ஜாம்பவானாக உருவெடுப்பார். இதற்காக கோலி நடராஜனுக்கு வாய்ப்புகளைக் கொடுத்து ஊக்குவித்து வருகிறார். அதுமட்டுமின்றி நடராஜன் தொடர்ந்து இவ்வாறு சிறப்பாக விளையாடி வந்தால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் முக்கிய பந்துவீச்சாளராக இந்திய அணியில் இருப்பார் என்றும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Nattu

இவரை தொடர்ந்து பும்ரா நடராஜனை தனக்கும் போட்டியாளராக நினைக்காமல் தூக்கிவைத்துக் கொண்டாடி வருகிறார். அதுமட்டுமின்றி பும்ரா தனது அனுபவங்களை நடராஜனுடன் பகிர்ந்து கொண்டார். கடைசியாக இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் நடராஜனின் பந்துவீச்சை மேலும் மேம்படுத்த உதவுகிறார். அத்தோடு நடராஜனுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறார் ஸ்ரீதர். நடராஜன் இந்திய அணியில் அறிமுகமாக முக்கிய காரணமாக இருந்தவர் விரேந்திர சேவாக் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement