காயத்தால் பறிபோன 2 தமிழக வீரர்களின் உலகக்கோப்பை கனவு – ரொம்ப பாவம் தான்

Sundar-1
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் முதல் 7-ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளையும் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி கெடு விதித்திருந்ததால் தற்போது அனைத்து நாடுகளும் தங்களது அணிகளை வெளியிட்டுள்ளன. இந்திய அணியும் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியை கடந்த 8ஆம் தேதி வெளியிட்டது. இதில் பல வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பும், சில வீரர்களுக்கு ஏமாற்றமும் கிடைத்தது.

IND

- Advertisement -

அந்த வகையில் இந்த டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு காயம் காரணமாக பறிபோனதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதன்படி வாஷிங்டன் சுந்தர் ஏற்கனவே இந்திய அணிக்காக அறிமுகமாகி தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் பொதுவாக பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசும் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கிலும் ஓரளவுக்கு கை கொடுப்பார்.

இதனால் நிச்சயம் டி20 உலக கோப்பை தொடரில் முதன்மை சுழற்பந்துவீச்சாளராக இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணியில் இடம் பிடித்த அவர் வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இடம் பிடிக்க முடியாமல் போனது.

Sundar-1

அதேபோன்று கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் போது இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அவருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அதேபோல கேப்டன் விராட் கோலியும் நடராஜன் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறுவார் என்று கூறியிருந்தார்.

Nattu

ஆனால் அவரும் ஐபிஎல் தொடரின்போது இடையில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறியதால் தற்போது காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இடம் பெற முடியாமல் போனது. இப்படி முதன் முறையாக உலக கோப்பை அணியில் இடம்பெறும் வாய்ப்பை தவறவிட்ட இந்த இரண்டு வீரர்களுக்காக ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும், ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் தேர்வானது சற்று ஆறுதலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement