
பெர்த் நகரில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அசத்தியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 150 ரன்களிலேயே இந்திய அணி சுருண்டு இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டு வந்து ஆஸ்திரேலியா அணிக்கு பதிலடி கொடுத்திருந்தது.
இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் டக் அவுட்டாகி இருந்தாலும் இரண்டாவது இன்னிங்சின் போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தியிருந்தார்.
இந்த போட்டியின் போது இளம் வீரரான அவருக்கும் ஆஸ்திரேலியா அணியின் அனுபவ வீரர்கள் சிலருக்கும் வார்த்தை மோதல் இருந்தது. அப்படி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்டார்க் ஆகியோருக்கு இடையே இருந்த வார்த்தைப்போர் முதல் போட்டியின் போது பெரியளவில் பேசப்பட்ட விடயமாக இருந்தது.
ஏனெனில் மிச்சம் ஸ்டார்க் இந்த போட்டியின் போது ஜெய்ஸ்வாலுக்கு எதிராக பந்துவீசும் போது என்னுடைய அனுபவத்திற்கு நான் இதைவிட வேகமாக உனக்கு எதிராக பந்து வீசுவேன் என்று கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த ஜெய்ஸ்வால் : நீங்கள் வீசுவது அவ்வளவு வேகமாக இல்லை என்று மீண்டும் தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இப்படி ஸ்டார்க் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இடையேயான ஸ்லெட்ஜிங் அதிகளவில் கவனத்தை ஈர்த்திருந்த வேளையில் ஜெய்ஸ்வால் தன்னிடமும் ஸ்லெட்ஜிங் செய்ததாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான நாதன் லயன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பெர்த் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது 120 ரன்கள் அடித்திருந்த ஜெய்ஸ்வால் தசைப்பிடிப்பு காரணமாக பிசியோ உதவி பெற்றார்.
இதையும் படிங்க : நான் விராட் கோலியின் பெரிய ரசிகன்.. இதுக்காக வயசை கணக்கு பண்ணி பாத்தேன்.. நிதிஷ் ரெட்டி நெகிழ்ச்சி
அப்போது நான் மீண்டும் பந்துவீச வருகையில் : “என்னை நோக்கி நீங்கள் லெஜெண்ட் தான்”, ஆனாலும் வயதானவர் என ஜெய்ஸ்வால் என்னிடம் ஸ்லெட்ஜிங் செய்தார் என நாதன் லயன் தெரிவித்தார். ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீரரான அவர் இதுவரை 130 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 532 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.