நான் விராட் கோலியின் பெரிய ரசிகன்.. இதுக்காக வயசை கணக்கு பண்ணி பாத்தேன்.. நிதிஷ் ரெட்டி நெகிழ்ச்சி

nitish reddy
- Advertisement -

இளம் கிரிக்கெட் வீரர் நிதிஷ் ரெட்டி இந்திய அணிக்காக அறிமுகமாகி விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் அசத்திய அவர் சமீபத்திய வங்கதேச டி20 தொடரில் அறிமுகமாகி ஒரு போட்டியில் அதிரடியாக விளையாடி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன் காரணமாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அவருக்கு முதல் போட்டியில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பில் முதல் இன்னிங்ஸில் மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது 41 ரன்கள் குவித்த அவர் 2வது இன்னிங்ஸில் 38* ரன்கள் குவித்து அசத்தினார். அந்த ஆட்டத்தில் விராட் கோலியுடன் சேர்ந்து 77* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் ஒரு விக்கெட் எடுத்து இந்தியா 295 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற தன்னுடைய பங்காற்றினார்.

- Advertisement -

கோலியின் ரசிகன்:

மேலும் 1 விக்கெட்டும் எடுத்த அவர் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். இந்நிலையில் விராட் கோலியுடன் சேர்ந்து விளையாடுவது தம்முடைய சிறுவயது கனவு என்று நித்திஷ் ரெட்டி கூறியுள்ளார். இது பற்றி பிசிசிஐ இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சிறுவயதில் விராட் கோலி மிகவும் பிரபலமாக இருந்தார்”

“அப்போது கேமராவை பார்க்காமல் அவருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படம் பாதுகாப்புக்கானது. அப்போது விராட் கோலியிடம் இப்போது போல புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்காது என்று நான் கருதினேன். அது என்னுடைய குழந்தை பருவ நினைவுகளை நினைவுபடுத்துகிறது. அப்போதிலிருந்தே நான் விராட் பையாவின் பெரிய ரசிகன். அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் பார்ப்பேன்”

- Advertisement -

வயது கணக்கீடு:

“அவருடைய கொண்டாட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த காலங்களில் இந்தியாவுக்காக நான் விளையாட அறிமுகமாகும் போது அவர் ஓய்வு பெற்றிருக்க மாட்டார் என்பதை உறுதி செய்வதற்காக அவருடைய வயதை எனது வயதுடன் கணக்கிட்டு பார்ப்பேன். தற்போது அவரிடம் விளையாடும் நான் சதத்தை நெருங்குவதை அருகில் இருந்து பார்த்தேன்”

இதையும் படிங்க: இங்கிலாந்து 43/4 டூ 280.. போப்புடன் சேர்ந்து தூக்கி நிறுத்திய ஹரி ப்ரூக்.. நியூஸிலாந்தில் உலக சாதனை

“அதனால் என்னுடைய அரை சதத்தை நான் உணரவில்லை. இன்னும் 12 ரன்கள் அடித்திருந்தால் அது என்னுடைய முதல் அரை சதமாக இருந்திருக்கும். ஆனால் விராட் கோலியின் 81வது சதத்தை அருகில் பார்த்தது எனக்கு சிறந்த தருணம்” என்று கூறினார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 1 – 0* (5) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நவம்பர் 6ஆம் தேதி அடிலெய்ட் நகரில் துவங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement