அந்த இடத்தில் அடிவாங்கிய வார்னர், கபில் தேவை முந்தி ஆஸி வீரர் சாதனை, இலங்கை படுதோல்வி – முழுவிவரம்

David Warner Nathan Lyon
Advertisement

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. ஜூன் 7இல் துவங்கிய இச்சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் இலங்கையை மண்ணைக் கவ்வ வைத்து வென்ற ஆஸ்திரேலியா தன்னை டி20 உலக சாம்பியன் என்று நிரூபித்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இளம் வீரர்களுடன் கொதித்தெழுந்த இலங்கை 3 – 2 என்ற கணக்கில் 30 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்து தக்க பதிலடி கொடுத்தது.

SL vs Aus

அதை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோபியின் ஒரு அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த ஜூன் 29இல் கால்லே மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் தரமான திட்டத்துடன் சிறப்பாக பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

சுருண்ட இலங்கை:
அந்த அணியின் கேப்டன் கருணரத்னே 28, நிசாங்கா 23, குசன் மெண்டிஸ் 3, சந்திமால் 0, டீ சில்வா 14 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அதிக பட்சமாக நிரோஷன் டிக்வெல்லா 58 ரன்களும் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக சுழல்பந்து வீச்சில் மாயாஜாலம் நிகழ்த்திய நேதன் லையன் 5 விக்கெட்களும் ஸ்வீப்சன் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா கடினமான பிட்ச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் இலங்கையை விட சிறப்பாக பேட்டிங் செய்து 321 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு டேவிட் வார்னர் 25, ஸ்டீவ் ஸ்மித் 6, டிராவிஸ் ஹெட் 6, மார்னஸ் லபுஸ்ஷேன் 13 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 71 ரன்களும் கேமரூன் க்ரீன் பொறுப்புடன் 77 ரன்களும் அலெக்ஸ் கேரி 45 ரன்களும் எடுத்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக ரமேஷ் மென்டிஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 111 ரன்கள் பின்தங்கிய நிலையில் சொந்த மண்ணில் சிறப்பாக பேட்டிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட இலங்கை 2-வது இன்னிங்சில் படுமோசமாக பேட்டிங் செய்து வெறும் 113 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

கபில் தேவை முந்திய லயன்:
அந்த அணிக்கு அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் கரோனாவால் இப்போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நிலையில் பொறுப்பை காட்டவேண்டிய கேப்டன் கருணாரத்னே 23, நிசாங்கா 14, குசல் மெண்டிஸ் 8, ஒசாடா பெர்னாண்டோ 12, டீ சில்வா 11, சந்திமால் 13 என அனைத்து பேட்ஸ்மேன்களும் 30 ரன்களை கூட தாண்டாமல் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். அந்தளவுக்கு சுழலில் மீண்டும் அசத்திய ஆஸ்திரேலியா சார்பில் நேதன் லையன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும் 2 ஸ்வீப்சன் விக்கெட்டும் எடுத்தனர்.

- Advertisement -

இறுதியில் வெறும் 4 ரன்கள் என்ற சுலபமான வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு 1 பவுண்டரி 1 சிக்ஸர் பறக்கவிட்ட டேவிட் வார்னர் 10* (4) ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார். இலங்கை மண்ணில் சுழல் எடுபடும் என்பதை நன்கு தெரிந்து அதற்காக திட்டமிட்டு அற்புதமாக பந்துவீசிய ஆஸ்திரேலியா இலங்கையை சொந்த மண்ணிலேயே மீண்டும் மண்ணை கவ்வ வைத்து 1 – 0* (2) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இப்போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய ஆஸ்திரேலியாவின் நேதன் லையன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 10-வது பவுலர் என்ற இந்திய ஜாம்பவான் கபில் தேவ் ஆல்-டைம் சாதனையை உடைத்துள்ளார். 434 விக்கெட்களை எடுத்துள்ள ஜாம்பவான் கபில் தேவை தற்போது 436 விக்கெட்டுகளை எடுத்து 11-வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளியுள்ள நேதன் லயன் 10-வது இடத்தை பிடித்து டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளார்.

- Advertisement -

வார்னருக்கு அடி:
முன்னதாக இப்போட்டியில் 2-வது இன்னிங்சில் திணறிய இலங்கைக்கு 9-வது விக்கெட்டாக டிராவிஸ் ஹெட் வீசிய பந்தில் இலங்கை வீரர் வண்டெர்செய் கிளீன் போல்டானார். அந்த பந்து ஸ்டம்பின் மேல்புறத்தை தொட்டு ஒரு பெய்ல்சை மேலே தூக்கி பின்னோக்கி சென்ற போது அதை முதல் ஸ்லீப் பகுதி நின்று கொண்டிருந்த டேவிட் வார்னர் உன்னிப்பாக கவனித்து கேட்ச் பிடிக்க சென்றார்.

இதையும் படிங்க : 90 வருட இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்வா – முழுவிவரம் இதோ

ஆனால் கவனம் முழுவதும் பந்து மீது இருந்ததன் காரணமாக தனது சிறுநீரக பகுதிகளை நோக்கி வேக்மாக வந்த பெயில்சை கவனிக்காத அவர் அதனால் நல்ல அடிவாங்கி அந்த பந்தை பிடிக்க முடியாமல் வலியால் சுருண்டு விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை பார்த்த அவரும் ஒருசில ஆஸ்திரேலிய வீரர்களும் தற்போது சிரிப்புடன் கலகலத்து வருகிறார்கள்.

Advertisement