90 வருட இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்வா – முழுவிவரம் இதோ

Rahul-2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 5-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் ஜூலை 1ஆம் தேதியன்று துவங்கியது. கடந்த வருடம் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டியில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை சாய்த்த விராட் கோலி தலைமையிலான இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது ரத்த செய்யப்பட்ட கடைசி போட்டி தற்போது துவங்கியுள்ளது. இதில் வென்று 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வதற்கு இந்தியாவும் அதற்கு சவாலை கொடுத்து 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய இங்கிலாந்தும் போராட உள்ளன. முன்னதாக லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணியான 4 நாட்கள் பயிற்சி போட்டியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய கேப்டன் குணமடையாத காரணத்தால் இப்போட்டியிலிருந்து மொத்தமாக விலகியுள்ளார்.

Jasprith Bumrah Rohit Sharma Wisden.jpeg

- Advertisement -

பும்ரா கேப்டன்:
அதனால் ஏற்கனவே துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த ஜஸ்பிரித் பும்ரா இப்போட்டியில் கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. பொதுவாகவே டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாவது அரிதான ஒன்றாகும். அந்த வகையில் 36-வது இந்திய டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற ஜஸ்பிரித் பும்ரா 36 வருடங்கள் கழித்து இந்தியாவை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆம் கடைசியாக கடந்த 1986-ஆம் ஆண்டு வேகப்பந்து வீச்சாளரான ஜாம்பவான் கபில்தேவ் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டிருந்தார்.

இதையடுத்து ரோகித் சர்மா இல்லாத நிலையில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் முன்னாள் கேப்டன் விராட் கோலி உட்பட எஞ்சிய வீரர்கள் இந்தியாவின் வெற்றிக்காக முழுமூச்சாக போராட உள்ளனர். முன்னதாக இப்போட்டியில் ஏற்கனவே கேஎல் ராகுல் காயத்தால் விலகாமல் இருந்திருந்தால் அவர்தான் கேப்டனாகியிருப்பார் அல்லது சமீபத்திய தென்ஆப்ரிக்க தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டிருந்தால் அவர் கேப்டனாயிருப்பார். அதனால் ஏற்கனவே விராட் கோலி தாமாக முன்வந்து பதவி விலகியதால் வேறு வழியின்றி பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Jasprith Bumrah India

விதவிதமான 6 கேப்டன்கள்:
ஆனால் இந்த 2022 கேலண்டர் வருடம் துவங்கி 6 மாதங்கள் முடிவதற்குள் 6 வெவ்வேறு வீரர்கள் இந்தியாவிற்கு கேப்டனாக இருந்துள்ளார்கள் என்பது வேடிக்கையாக அமைந்துள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. 2022 புத்தாண்டு துவங்கியதும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி முதலாவதாக நடைபெற்றது. அதில் விராட் கோலி காயமடைந்ததால் ஏற்கனவே ரோகித் சர்மா காயமடைந்து இந்தியாவில் இருந்த நிலையில் கேஎல் ராகுல் முதல் முறையாக கேப்டனாக அறிவிக்கப்பட்டு அவரது தலைமையில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

Rahul

2. அதனால் 1 – 1* என சமனடைந்த அந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது போட்டிக்கு திரும்பிய விராட் கோலி கேப்டன்ஷிப் செய்த போதிலும் 2 – 1 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்தியா நம்பர் ஒன் டெஸ்ட் அந்தஸ்தையும் இழந்தது.

- Advertisement -

3. அதன்பின் சொந்த மண்ணில் நடந்த வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என 3 வகையான தொடர்களுக்கு திரும்பிய ரோகித் சர்மா இந்தியாவை சிறப்பாக வழிநடத்தி அனைத்து போட்டிகளிலும் வென்று ஒயிட் வாஷ் கோப்பைகளை வென்று கொடுத்தார்.

Rohith

4. அதன்பின் நடந்த ஐபிஎல் 2022 தொடருக்கு பின்பு சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் ஓய்வெடுத்த நிலையில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் ஒருநாள் முன்பாக துரதிர்ஷ்டவசமாக காயத்தால் விலகினார்.

- Advertisement -

அதனால் முதல் முறையாக கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரிஷப் பண்ட் தலைமையில் அத்தொடரை எதிர்கொண்ட இந்தியா கடுமையான போராட்டத்துக்குப் பின் 2 – 2 என சமன் செய்தது.

IND vs IRE Umran Malik

5. அதில் தற்போது நடக்கும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக ரிஷப் பண்ட் இங்கிலாந்து சென்றதால் அடுத்ததாக நடந்த அயர்லாந்து டி20 தொடருக்கு ஐபிஎல் 2022 வென்று காட்டிய ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்த வருடத்தில் 5-வது கேப்டனாக செயல்பட்ட அவரது தலைமையில் 2 – 0 என்ற கணக்கில் அயர்லாந்தை தோற்கடித்து இந்தியா கோப்பையை வென்றது.

6. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா இந்த வருடத்தின் 6-வது கேப்டனாக இந்தியாவை வழி நடத்துகிறார்.

இதையும் படிங்க : IND vs ENG : மோர்கனுக்கு பின் இங்கிலாந்தின் புதிய அதிரடி கேப்டன் அறிவிப்பு, அறிமுக தொடரில் சமளிக்குமா இந்தியா?

90 வருடங்களில்:
இப்படி ஒரு காலண்டர் வருடத்தில் இந்தியாவை 6 வெவ்வேறு வீரர்கள் கேப்டனாக வழிநடத்துவது 90 வருட இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ஆம் கடந்த 1932 முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் இந்தியாவுக்கு இதற்கு முன் கடந்த 1959இல் ஹேமு அதிகாரி, டட்டா கைக்வாட், வினோ மன்கட், குலாப்ராய் ராம்சந்த், பங்கஜ் ராய் ஆகிய 5 வீரர்கள் கேப்டனாக செயல்பட்டதே வரலாற்றில் அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement