IND vs AUS : இந்தியாவை சிதைத்த நேதன் லயன் – அனில் கும்ப்ளே, முரளிதரன், பெனட் ஆகியோரை மிஞ்சி 4 புதிய வரலாற்று சாதனை

Nathan Lyon
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. அதை விட பிட்ச் பற்றி தேவையின்றி விமர்சித்த அந்த அணி வாயில் பேசியதை செயலில் காட்டத் தவறியதால் கிண்டல்களையும் விமர்சனங்களையும் சந்தித்தது. அந்த நிலையில் குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து இத்தொடரை சமன் செய்து தங்களது நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அந்த அணி மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் துவங்கிய 3வது போட்டியில் அபாரமாக செயல்பட்டது.

Jadeja-1

- Advertisement -

குறிப்பாக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து இந்தியாவை முதல் மணி நேரத்திலேயே சுழலத் துவங்கிய பிட்ச்சில் துல்லியமாக பந்து வீசிய ஆஸ்திரேலியா வெறும் 120 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா உஸ்மான் கவாஜா 60, மார்னஸ் லபுஸ்ஷேன் 31 என முக்கிய வீரர்களின் ரன் குவிப்பால் 186/4 என்ற நல்ல நிலையில் இருந்த போது அனலாக பந்து வீசி 197 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

சிதைத்த லயன்:
அதை தொடர்ந்து 88 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய இந்தியாவை ஆஸ்திரேலியாவின் முதன்மை ஸ்பின்னரான நேதன் லயன் ஆரம்பம் முதலே எளிதாக ரன்களை குவிக்க விடாமல் சவாலை கொடுத்தார். குறிப்பாக ரோகித் சர்மா 12, சுப்மன் கில் 5, ரவீந்திரன் ஜடேஜா 7, கேஎஸ் பரத் 3, அஸ்வின் 8 என முக்கிய வீரர்கள் உட்பட மொத்தமாக 8 விக்கெட்டுகளை சாய்த்த அவர் இந்தியாவை வெறும் 167 ரன்களுக்கு சுருட்டி மிரட்டலான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதனால் 3வது நாளில் 75 ரன்கள் என்ற சுலபமான இலக்கை துரத்தும் ஆஸ்திரேலியாவின் வெற்றி உறுதியாகவே பார்க்கப்படுகிறது.

Nathan Lyon

முன்னதாக கடந்த 2011ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி சுழலுக்கு சாதகமில்லாத ஆஸ்திரேலிய மைதானங்களில் சிறப்பாக செயல்பட்டு ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு பின் நிலையான இடத்தைப் பிடித்து 450க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ள நேதன் லயன் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக நிறைய வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து வருகிறார். அந்த வரிசையில் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் சாய்த்த அவர் 2வது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

1. மொத்தம் 11 விக்கெட்டுகளை சாய்த்த அவர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த பவுலர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் சாதனையை தகர்த்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. நேதன் லயன் : 113* (25 போட்டிகள்)
2. அனில் கும்ப்ளே : 111 (20 போட்டிகள்)
3. ரவிச்சந்திரன் அஸ்வின் : 106* (21 போட்டிகள்)

Nathan Lyon and Shane Warne 1

2. அத்துடன் இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் என்ற முன்னாள் நட்சத்திரம் ரிச்சி பெனட் அவர்களது சாதனையும் தகர்த்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. நேதன் லயன் : 53* (10 போட்டிகள்
2. ரிச்சி பெனட் : 52 (8 போட்டிகள்)
3. கிரஹாம் மெக்கன்சி : 34 (8 போட்டிகள்)
4. ஷேன் வார்னே : 34 (9 போட்டிகள்)
5. ஜேசன் கில்லஸ்ப்பி : 33 (7 போட்டிகள்)
6. கிளன் மெக்ராத் : 33 (8 போட்டிகள்)

- Advertisement -

3. அத்துடன் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த 2வது வெளிநாட்டு பவுலர் (113*) என்ற இலங்கையின் முத்தையா முரளிதரன் (105) சாதனையையும் தகர்த்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க:45 ஆண்டுகளுக்கு பிறகு இந்தூர் டெஸ்ட்டில் இந்திய அணி சந்தித்த மோசமான நிலை – இது தெரியுமா உங்களுக்கு?

4. முன்னதாக ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இதே போல் 8 விக்கெட்டுகள் எடுத்திருந்த அவர் இந்தியாவுக்கு எதிராக 2 முறை ஒரு இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை எடுத்த முதல் ஆஸ்திரேலிய பவுலர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

Advertisement