45 ஆண்டுகளுக்கு பிறகு இந்தூர் டெஸ்ட்டில் இந்திய அணி சந்தித்த மோசமான நிலை – இது தெரியுமா உங்களுக்கு?

Jadeja-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நேற்று மார்ச் ஒன்றாம் தேதி இந்தூர் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த 4 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகித்திருந்தது.

IND vs AUS

- Advertisement -

அதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியானது மூன்றாம் நாளிலேயே முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது. ஏனெனில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 109 ரன்களை மட்டுமே குவித்தது.

அதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி தங்களது முதல் இன்னிங்சில் 197 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணியிடம் சரணடைந்தது.

KS Bharat

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 75 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த போட்டியில் மூன்று நாட்கள் எஞ்சியிருப்பதாலும், ஆஸ்திரேலிய அணியின் கையில் 10 விக்கெட் இருப்பதாலும் இந்த போட்டியில் அவர்கள் மூன்றாம் நாள் காலையிலே எளிதில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி இந்த டெஸ்டில் 45 ஆண்டுகள் கழித்து ஒரு மோசமான சாதனையும் நிகழ்த்தியுள்ளது. அந்த சாதனை யாதெனில் : ஒரே டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 200 ரன்களுக்கு கீழாக இந்திய அணி அடித்து 45 ஆண்டுகள் ஆகிறது. 1978 ஆம் ஆண்டுதான் இந்திய அணி ஒரு இன்னிங்சில் கூட 200 ரன்களை தொடாமல் ஆட்டம் இழந்துள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : அவசரப்படுத்தி புஜாராவை சிக்ஸர் அடிக்க வைத்து இந்தியாவை காலி செய்தாரா ரோஹித்? ரசிகர்கள் அதிருப்தி

அதனை தொடர்ந்து தற்போது 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி துவங்கிய இந்த போட்டியில் இதே சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 109 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸ்சில் 163 ரன்களையும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement