அவசரப்படுத்தி புஜாராவை சிக்ஸர் அடிக்க வைத்து இந்தியாவை காலி செய்தாரா ரோஹித்? ரசிகர்கள் அதிருப்தி

Pujara SIX Out
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்தியாவுக்கு வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற இன்னும் ஒரு வெற்றி அவசியமாகிறது. ஆனால் இந்தூரில் துவங்கிய 3வது போட்டியில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா மோசமாக செயல்பட்டு 109 ரன்களுக்கு சுருண்டது ஆரம்பத்திலேயே தோல்வியை உறுதி செய்துள்ளது. அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா உஸ்மான் கவாஜா 60, மார்னஸ் லபுஸ்ஷேன் 31 என முக்கிய வீரர்களின் ரன் குவிப்பால் 186/4 என்ற நல்ல நிலையில் இருந்தது. அப்போது அனலாக செயல்பட்டு அடுத்த 11 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவை 197 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய இந்திய பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பியதல் இந்தியா வெறும் 163 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

டிப்ஸ் என்ற பெயரில்:
அதிகபட்சமாக புஜாரா 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 8 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 3வது நாளில் 75 என்ற சுலபமான இலக்கை துரத்துவதற்கு காத்திருக்கும் ஆஸ்திரேலியாவின் வெற்றி உறுதியாகவே பார்க்கப்படுகிறது. முன்னதாக இப்போட்டியின் 2வது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா 12, கில் 5, விராட் கோலி 13, ரவீந்திர ஜடேஜா 7, ஷ்ரேயஸ் ஐயர் 26 என முக்கிய வீரர்கள் பொறுப்பின்றி சொற்ப ரன்களில் அவுட்டாகி இந்தியாவை கைவிட்டனர்.

இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கிய புஜாரா மீண்டும் தனது அனுபவத்தை காட்டி வழக்கம் போல நங்கூரத்தை போட்டு பொறுமையின் சிகரமாக விளையாடிக் கொண்டிருந்தார். அதன் காரணமாக 100 ரன்கள் முன்னிலையை இந்தியா நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது பெவிலியிலிருந்த கேப்டன் ரோகித் சர்மா இஷன் கிஷனை அழைத்து “இவர் என்ன ஃபீல்டர்கள் உள்ளே இருக்கையில் இப்படி மெதுவாக விளையாடுகிறார். எதிர்ப்புறம் எஞ்சிய விக்கெட்டுகள் விழுவதற்குள் சற்று வேகமாக ரன்களை குவிக்குமாறு சொல்” என்ற வகையில் சொல்லி அனுப்பியது அவரது சைகைகளில் தெளிவாக தெரிந்தது.

- Advertisement -

அதை தொடர்ந்து களத்திற்குள் தண்ணீர் எடுத்துச் செல்வது போல் சென்ற இஷான் கிசான் ரோகித் சர்மா சொன்னதை புஜாராவிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட புஜாரா அடுத்த சில ஓவர்களில் நேதன் லயன் வீசிய பந்தில் 79 மீட்டர் அதிரடி சிக்சரை பறக்க விட்டு ரசிகர்களையும் ரவி சாஸ்திரி உள்ளிட்ட வர்ணனையாளர்களையும் ஆச்சரியப்படுத்தினார். ஏனெனில் பொதுவாகவே சிங்கிள், டபுள் வாயிலாக அதிக ரன்கள் எடுக்கக்கூடிய புஜாரா கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக அஜஸ் பட்டேல் பந்தில் சிக்ஸர் அடிச்சிருந்த நிலையில் 2 வருடங்கள் கழித்து இப்போது தான் முதல் முறையாக சிக்ஸர் அடித்துள்ளார்.

அதற்கு காரணமாக இருந்த ரோகித் சர்மாவும் அதை பார்த்து மகிழ்ச்சியுடன் வியந்து பாராட்டினர். மேலும் புஜாராவையே சிக்சர் அடிக்க வைத்து அவரை சில ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் அதுவே இறுதியில் இந்தியாவின் கதையை முடித்தது போல் தனது வழக்கத்திற்கு மாறான பேட்டிங்கை பின்பற்றி விளையாடத் துவங்கிய காரணத்தால் கவனத்தை இழந்த புஜாரா அடுத்த சில ஓவர்களிலேயே நேதன் லயனிடம் ஸ்டீவ் ஸ்மித்தின் அபார கேட்ச்சால் அவுட்டானதாக நிறைய ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதையும் படிங்க: IND vs AUS : அஷ்வினை ஏன் ரெகுலரா அசிங்கப்படுத்துறிங்க? உங்களால் இந்தியாவுக்கும் பின்னடைவு – ரோஹித்தை விளாசும் கவாஸ்கர்

பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருப்பது போல் மெதுவாக விளையாடி பெரிய ரன்களை எடுப்பதே புஜாராவின் ஸ்டைல் என்பதை தெரிந்தும் அவரை அவ்வாறு விளையாட விடாமல் தடுத்த ரோகித் சர்மா சுமாராக கேப்டன்ஷிப் செய்ததாக நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள். ஏனெனில் எதிர்புறம் கடைசி வரை அக்சர் பட்டேல் அவுட்டாகாமல் இருந்ததற்கு புஜாராவும் அவசரப்பட்டு அவுட்டாகாமல் இருந்திருந்தால் இன்னும் கூடுதலான ரன்கள் எடுக்கப்பட்டு இந்தியா வெற்றிக்கு போராட அதிக வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement