ஆஷஸ் தொடரிலிருந்து வெளியேறிய நாதன் லயன். வரலாற்று சாதனையை நிகழ்த்திய அவருக்கு – ஏற்பட்ட பரிதாப நிலை

Nathan-Lyon
- Advertisement -

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் வலுவான முன்னிலையை பெற்றுள்ளது.

ENG vs AUS

- Advertisement -

மேலும் இந்த தொடரில் இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளதால் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை இங்கிலாந்து மண்ணில் கைப்பற்ற பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சொந்த மண்ணில் அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியை பெற்ற இங்கிலாந்து அணி தற்போது இந்த தொடரில் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி சார்பாக விளையாடிய சூழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் தொடர்ச்சியாக இடைவெளியின்றி 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருந்தார்.

Lyon

இந்நிலையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. இந்த போட்டியின் 3 ஆம் நாளில் பீல்டிங் செய்துகொண்டிருந்த நாதன் லயன் இங்கிலாந்து வீரர் அடித்த பந்தை பவுண்டரி லைனில் தடுக்க நினைத்த போது காலில் காயம் அடைந்தார். அதன் காரணமாக வலியால் துடித்த அவர் மைதானத்தில் வெளியேறினார். மேலும் 4 ஆம் நாள் ஆட்டத்தின் போது ஊன்றுகோல் உதவியுடன் மைதானத்திற்கு வந்திருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக இரண்டாவது இன்னிங்சின் போது களத்திற்கு வர மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணிக்கு தேவையான முக்கியமான நேரத்தில் வலியுடன் வந்து அவர் பேட்டிங்கில் போராடிய விதம் அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றது. இருந்தாலும் அவர் பந்துவீச வரவில்லை.

இதையும் படிங்க : ஹேய் ஸ்லெட்ஜர்களே, நேர்மை இந்தியர்களுக்கு மட்டும் தானா? கம்பீர் கோபமான ட்வீட், காரணம் என்ன?

இந்நிலையில் தற்போது காலில் ஏற்பட்டுள்ள காயத்தின் காரணமாக அவர் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் இருந்தும் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோன்று அவருக்கு பதிலாக மாற்றுவீரராக சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்பி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement