ஹேய் ஸ்லெட்ஜர்களே, நேர்மை இந்தியர்களுக்கு மட்டும் தானா? கம்பீர் கோபமான ட்வீட், காரணம் என்ன?

Gautam Gambhir
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியிலும் 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது. மறுபுறம் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் முதல் போட்டியிலேயே கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்ட இங்கிலாந்து 2வது போட்டியிலும் அதே அணுகு முறையுடன் விளையாடி சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

முன்னதாக அந்த போட்டியில் 371 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு ஜோ ரூட் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டானதால் 45/4 என ஆரம்பத்திலேயே சரிந்தது. அந்த சமயத்தில் நங்கூரமாக நின்று போராடிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உடன் தனது பங்கிற்கு சிறப்பாக செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் பென் டூக்கெட் 83 ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ நிதானமாக விளையாட முயன்ற போதிலும் கேமரூன் கிரீன் வீசிய 52வது ஓவரில் பவுன்ஸ் ஆகி வந்த கடைசி பந்தை குனிந்து அடிக்காமல் விட்டார்.

- Advertisement -

கம்பீர் கோபம்:
அப்போது எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனடியாக வெள்ளைக்கோட்டை விட்டு அவர் வெளியேறியதை பார்த்த அலெக்ஸ் கேரி பந்தை பிடித்து ஸ்டம்ப்களில் அடித்த ரன் அவுட் செய்தார். அதை ஆஸ்திரேலிய அணியினர் அவுட் கேட்டதை தொடர்ந்து சோதித்த 3வது நடுவர் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறியதால் அவுட் கொடுத்ததால் ஜானி பேர்ஸ்டோ ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பியது இங்கிலாந்து ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது.

அந்த தருணம் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி இறுதியில் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் அடித்து போராடியும் இங்கிலாந்தின் வெற்றியை பறித்தது. மேலும் அந்த சமயத்தில் பந்தை கீப்பர் பிடித்ததை முழுமையாக கவனிப்பதற்கு முன்பாகவே ஜானி பேர்ஸ்டோ வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினார். அதனால் காலாவதியாகாத அந்த பந்தை விழிப்புணர்வுடன் இருந்து பிடித்த அலெக்ஸ் கேரி விதிமுறைகளுக்கு உட்பட்டு அவுட் செய்தார் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். ஆனால் பந்தை திரும்பி பார்க்காத தவறை செய்த ஜானி பேர்ஸ்டோ “நான் இந்த பந்தை எதிர்கொண்டு முடித்து விட்டேன்” என்பதை உணர்த்துவதற்காக உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களும் செய்வது போல் வெள்ளை கோட்டுக்குள் தன்னுடைய காலால் குறியிட்டு பின்பு தான் வெளியே சென்றார்.

- Advertisement -

அத்துடன் அவர் காலால் வெள்ளைக்கோட்டில் குறியிடும் போது பந்தை முழுமையாக பிடிக்காத அலெக்ஸ் கேரி சரியாக பேர்ஸ்டோ வெளியேறிய சமயம் பார்த்து அவுட்டாக்கினார். அந்த வகையில் இந்த இடத்தில் ஆஸ்திரேலியா விதிமுறைக்கு உட்பட்டு அவுட் செய்திருந்தாலும் நியாயத்திற்கு எதிராகவும் கிரிக்கெட்டின் நேர்மைக்கு புறம்பாகவும் நடந்து கொண்டதாக இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் கொந்தளிக்கின்றனர்.

சொல்லப்போனால் இதுவும் கிட்டத்தட்ட மன்கட் அவுட்டுக்கு நிகரானது என்றும் சொல்லலாம். இந்த நிலைமையில் “ஹேய் ஸ்லெட்ஜர்ஸ் கிரிக்கெட்டின் நேர்மை எனும் வார்த்தைகள் உங்களுக்கு பொருந்தாதா அல்லது அது இந்தியர்களுக்கு மட்டும் தானா” என்று முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் ட்விட்டரில் கோபத்துடன் விமர்சித்துள்ளார். அதாவது வரலாற்றில் ஸ்லெட்ஜிங் செய்யும் கலைக்கு பிரபலமான ஆஸ்திரேலியாவை ஸ்லெட்ஜர்ஸ் என்றழைத்துள்ள அவர் நேர்மைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்று விமர்சித்துள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக அஸ்வின் மற்றும் தீப்தி சர்மா ஆகிய இந்தியர்கள் மன்கட் செய்த போதெல்லாம் ஆஸ்திரேலியா மற்றும் அதன் முன்னாள் வீரர்கள் நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டதாக விமர்சித்தனர். அப்படிப்பட்ட நிலையில் இந்த சூழ்நிலையில் நீங்கள் நியாயமாக நடந்து கொள்ளாதது ஏன்? என்று அவர் பெயர் குறிப்பிடாமல் ஆஸ்திரேலியாவை மறைமுகமாக தாக்கியுள்ளார்.

இதையும் படிங்க:வேர்ல்டுகப்ல இவர் மட்டும் ஆடுனா பவுலிங்ல ஜொலிப்பாரு. ஆனா அது பும்ரா இல்ல – சவுரவ் கங்குலி கருத்து

அதே போல இதே இங்கிலாந்துக்கு எதிராக இயன் பெல்லை ரன் அவுட் செய்தும் அதை எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா வாபஸ் பெற்று நேர்மைத் தன்மையுடன் நடந்து கொண்டது. அந்த வகையில் நேர்மை தன்மையுடன் நடந்து கொள்வது இந்தியாவுக்கு மட்டும் தானா? உங்களுக்கெல்லாம் கிடையாதா என்றும் அவர் ஆஸ்திரேலியாவை விமர்சித்துள்ளார்.

Advertisement