விராட் கோலிக்கும் இந்தியாவுக்கு வாய்ப்பில்லை.. 2024 டி20 உ.கோ ஃபைனல் அணிகள் பற்றி நேதன் லயன் கணிப்பு

Nathan Lyon
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக உலகின் டாப் 20 அணிகள் மோதுகின்றன. அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2007க்குப்பின் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இந்த தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து ஜூன் ஒன்பதாம் தேதி பரம எதிரி பாகிஸ்தானை நியூயார்க் நகரில் இந்தியா எதிர்கொள்வது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போட்டிகளில் வென்று இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

- Advertisement -

லயன் கணிப்பு:
ஏனெனில் கடந்த 10 வருடமாக ஐசிசி கோப்பையை வெல்லாவிட்டாலும் 100க்கு 99% தொடர்களில் இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. சொல்லப்போனால் கடைசியாக நடந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளுக்கு இந்தியா தகுதி பெற்றது. அதனால் இம்முறையும் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் ஃபைனலில் மோதுவதற்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.

அதே போல 2023 உலகக் கோப்பை, 2024 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்து தொடர்நாயகன் மற்றும் ஆரஞ்சு தொப்பியை வென்ற விராட் கோலி தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே இம்முறையும் அவர் அதிகபட்ச ஸ்கோர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி ஃபைனலுக்கு தகுதி பெறும் அணிகளை நேதன் லயன் கணித்துள்ளார்.

- Advertisement -

அதில் முதலாவதாக ஆஸ்திரேலியா ஃபைனலுக்கு வரும் என்று அவர் நாட்டுப்பற்றுடன் தேர்வு செய்துள்ளார். ஆனால் 2வது அணியாக பாகிஸ்தான் ஃபைனலுக்கு வரும் என்று தெரிவிக்கும் அவர் விராட் கோலி அதிகபட்ச ஸ்கோர் அடித்து இந்தியா வெல்வதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லலாம் சொல்லியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டி20 ஃபைனலுக்கு கண்டிப்பாக ஆஸ்திரேலியா வரும். ஏனெனில் நான் கொஞ்சம் ஒரு தலைப்பட்சமாக இருப்பேன்”

இதையும் படிங்க: சுரேஷ் ரெய்னா என்னோட சின்ன தம்பி மாதிரி.. நான் கேட்டதும் உடனே டெலிட் பண்ணிட்டாரு.. ஷாஹித் அப்ரிடி

“அவர்களுடன் பாகிஸ்தான் விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகளில் அவர்களிடம் தரமான ஸ்பின்னர்கள் மற்றும் மின்சாரம் போல் செயல்படக்கூடிய பாபர் அசாம் போன்ற பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அதே போல தொடரின் துவக்கத்தில் யாராவது அதிகப்பட்ச ஸ்கோர் அடிப்பார்கள். அது மிட்சேல் மார்ஷாக இருப்பார். அவர் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலுமே அசத்தக்கூடியவர்” என்று கூறினார்.

Advertisement