சுரேஷ் ரெய்னா என்னோட சின்ன தம்பி மாதிரி.. நான் கேட்டதும் உடனே டெலிட் பண்ணிட்டாரு.. ஷாஹித் அப்ரிடி

Shahid Afridi 3
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் மாதம் கோலாகலமாக நடைபெற உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை நிர்ணயிக்கப் போகும் இந்தத் தொடரில் உலகின் டாப் 20 கிரிக்கெட் அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2007க்குப்பின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

இந்த தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில், இந்திய ஜாம்பவான் யுவராஜ் சிங் ஆகியோரை ஐசிசி சமீபத்தில் தூதுவர்களாக அறிவித்தது. அதே போல பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடியையும் ஐசிசி நிர்வாகம் அம்பாசிடராக அறிவித்திருந்தது. இதற்கு முன் இந்த 3 வீரர்களும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி டி20 உலகக் கோப்பையை பிரபலப்படுத்துவதற்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.

- Advertisement -

சின்னத்தம்பி ரெய்னா:
அதனால் அவர்களை கௌரவப்படுத்தும் நோக்கத்தில் ஐசிசி இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் அதைப் பார்த்த ஒரு பாகிஸ்தான் பத்திரிகை நிருபர் தேவையின்றி இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவை வம்பிழுத்தார். இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டது பின்வரலாறு. “ஐசிசி ஷாஹித் அப்ரிடியை டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் அம்பாசிடராக நியமித்துள்ளது. ஹலோ சுரேஷ் ரெய்னா?” என்று பதிவிட்டார்.

அதாவது எங்களுடைய அப்ரிடி அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உங்களுடைய நிலைமை என்ன? என்று ரெய்னாவை அவர் வம்பிழுத்தார். அதற்கு கொஞ்சமும் யோசிக்காத சுரேஷ் ரெய்னா கொடுத்த பதிலடி பின்வருமாறு. “நான் ஐசிசி அம்பாசிடர் கிடையாது. ஆனால் நான் என்னுடைய வீட்டில் 2011 உலகக் கோப்பையை வைத்துள்ளேன். மொஹாலியில் நடைபெற்ற போட்டி நினைவிருக்கிறதா? அது உங்களுக்கு மறக்க முடியாத நினைவுகளை கொண்டு வரும் என்று நம்புகிறேன்” என பதிலளித்தார்.

- Advertisement -

அதாவது மொகாலியில் நடைபெற்ற 2011 உலகக் கோப்பையில் ஷாஹித் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்துவதற்கு ரெய்னா முக்கிய பங்காற்றினார். அதையே அந்த பாகிஸ்தான் பத்திரிக்கையாளருக்கு ரெய்னா பதிலடியாகவும் கொடுத்தார். இந்நிலையில் தம்முடைய அன்பான கோரிக்கையை ஏற்று ரெய்னா அந்த பதிவை டெலிட் செய்து விட்டதாக ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் அதே தப்பை ரோஹித் மற்றும் கோலி செய்யாம இருந்த கப் நமக்குத்தான் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டில் ரெய்னாவும் நானும் நிறைய தருணங்களை பகிர்ந்து கொண்டுள்ளோம். சில நேரங்களில் மிருதுவான இதயம் கொண்ட போட்டிகள் இருக்கும். சமூகவலைதளத்தில் அவருடைய அந்தப் பதிவை பார்த்த பின் அவரிடம் நான் பேசினேன். அவர் சின்னத் தம்பியை போல் சூழ்நிலையை புரிந்து கொண்டு டெலீட் செய்ய சம்மதித்தார். எனவே இது போன்ற விஷயங்கள் தற்போது சகஜம்” என்று கூறினார்.

Advertisement