
இளம் இந்திய கிரிக்கெட் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் குவித்தார். அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் தனது அறிமுகப் போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராகவும் ஜெய்ஸ்வால் சாதனை படைத்தார்.
மேலும் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய பங்காற்றினார். முன்னதாக அந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க்கை அவர் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தார். அப்போது ஒரு பவுண்டரி அடித்த பின் “உங்களுடைய பந்து மிகவும் மெதுவாக வருகிறது” என்று ஸ்டார்க்கிடம் அவர் சொன்னது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
ஏனெனில் 140 – 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய அவர் விராட் கோலி உள்ளிட்ட உலகின் டாப் பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்கும் பவுலராக அறியப்படுகிறார். அப்படிப்பட்ட அவரை பவுண்டரியை அடித்து ஜெய்ஸ்வால் நேருக்கு நேராக அப்படி சொன்னது ஆச்சரியமாக அமைந்தது. சொல்லப்போனால் தாமாக இருந்தால் ஸ்டார்க் மெதுவாக பந்து வீசினால் வாயை மூடிக்கொண்டு விளையாடுவேன் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் கூறினார்.
ஆனால் 22 வயதிலேயே அவரிடம் அதை நேராக சொல்லும் அளவுக்கு ஜெய்ஸ்வால் பயமற்ற கிளாஸ் பிளேயர் என்று அலெஸ்டர் குக் சமீபத்தில் பாராட்டியிருந்தார். இந்நிலையில் அதே போட்டியில் ஜெய்ஸ்வால் தம்மையும் வயதானவர் என்று சொல்லி ஸ்லெட்ஜிங் செய்ததாக நேரில் தெரிவித்துள்ளார். இது பற்றி சென் ரேடியோவில் அவர் தெரிவித்தது பின்வருமாறு.
“இளம் ஜெய்ஸ்வால் என்னிடம் வந்து நீங்கள் ஒரு லெஜெண்ட். ஆனால் நீங்கள் வயதானவர் என்று சொன்னார். குறிப்பாக 120 ரன்கள் அடித்திருந்த போது அவர் அப்படி என்னிடம் சொன்னார். அவை அனைத்தும் வேடிக்கையாக இருந்தது. அதற்கு நீங்கள் சொன்னதை பாராட்டுகிறேன் நண்பா, ஆனால் நான் அந்தளவுக்கு வயதானவராக உணரவில்லை என்று ஜெய்ஸ்வாலுக்கு பதிலளித்தேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: 365 ஸ்ட்ரைக் ரேட்டில்.. 28 பந்தில் 100.. மேகலயாவை நொறுக்கிய அபிஷேக் சர்மா.. சூர்யகுமாரை முந்தி உலக சாதனை
அந்த வகையில் இளம் வயதிலேயே செயலில் மட்டுமன்றி வாயிலும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர்களுக்கு பதிலடி கொடுக்கும் அளவுக்கு ஜெய்ஸ்வால் தைரியமானவராகவே இருக்கிறார். இதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 0* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அடுத்ததாக அடிலெய்ட் நகரில் இரண்டாவது போட்டி நாளை துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.