பவுலிங்கை விடுங்க.. டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் அரிய சாதனையை நிகழ்த்திய – நாதன் லயன்

Lyon
- Advertisement -

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி துவங்கிய நிலையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்ஸ்சில் 383 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக கேமரூன் கிரீன் ஆட்டமிழக்காமல் 174 ரன்கள் குவித்தார். பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 179 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

அதன் பின்னர் 204 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 164 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 369 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

அந்த வகையில் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் குவித்துள்ள வேளையில் மேலும் அந்த அணியின் வெற்றிக்கு 258 ரன்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி சார்பாக நைட் வாட்ச்மேனாக விளையாடிய நாதன் லையன் பேட்டிங்கில் அரிதான சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியின் போது இரண்டாவது இன்னிங்சில் 46 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நாதன் லையன் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 128 போட்டிகளில் பங்கேற்று 162 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 1501 ரன்களை குவித்துள்ளார். இதில் அவர் ஒரு அரைசதம் கூட இதுவரை அடித்ததில்லை.

இதையும் படிங்க : நீங்க இப்படியொரு முடிவை எடுத்தது தப்பே இல்ல.. பி.சி.சி.ஐ யின் முடிவுக்கு கபிலதேவ் ஆதரவு – விவரம் இதோ

இதன் மூலம் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் அதிக டெஸ்ட் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையில் நாதன் லையன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேமர் ரோச் 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் கூட அடிக்காமல் 1174 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement