நீங்க இப்படியொரு முடிவை எடுத்தது தப்பே இல்ல.. பி.சி.சி.ஐ யின் முடிவுக்கு கபிலதேவ் ஆதரவு – விவரம் இதோ

Kapil-Dev
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்ட வீரர்களின் வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலில் ஏ ப்ளஸ், ஏ, பி, சி என நான்கு வகையான பிரிவுகளின் கீழ் வீரர்களின் சம்பள ஒப்பந்த பட்டியல் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில் சில வீரர்களுக்கு சம்பள பட்டியலில் தகுதி உயர்வு பெற்ற வேளையில் சில வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டதும் பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியது.

அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியா நீக்கப்பட்டது பெருமளவில் பேசப்படும் பொருளாக மாறியது.

- Advertisement -

அவர்கள் இப்படி ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட காரணமாக முதல் தர கிரிக்கெட்டில் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டை அவர்கள் மீது பிசிசிஐ வைத்து அவர்களை அந்த பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. பிசிசிஐ ரஞ்சி போட்டிகளில் விளையாடுமாறு கேட்டுக் கொண்டும் அவர்கள் இருவரும் விளையாடாததே இந்த நீக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பிசிசிஐ-யின் இந்த நடவடிக்கை குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் பிசிசிஐ-யின் இந்த முடிவு சரியான ஒன்று என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : முதல் தர கிரிக்கெட்டிற்கு முன்னுரிமை அளித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு படி முன்னேறியுள்ளதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

- Advertisement -

இந்திய வீரர்கள் நிச்சயம் நேரம் கிடைக்கும் போது முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும். அதுதான் நாட்டுக்கு நல்லது நாட்டிற்கு நல்லது எதுவாக இருந்தாலும் அதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சில வீரர்கள் கஷ்டப்பட்டாலும் விளையாட்டையும் நாட்டையும் விட யாரும் பெரியவர்கள் இல்லை என்று கபில் தேவ் கூறினார்.

இதையும் படிங்க : முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் இல்லாத திட்டத்தை கடைசி போட்டியில் கையிலெடுக்கும் ரோஹித் சர்மா – எதற்கு தெரியுமா?

மேலும் இதுகுறித்து பேசிய மதன் லால் கூறுகையில் : பிசிசிஐ முதல்தர கிரிக்கெட்டை விளையாட சொன்னால் வீரர்கள் சென்று விளையாடி இருக்க வேண்டும். இப்படி முதல் தர கிரிக்கெட்டிற்கு விளையாடுவதை கட்டாயம் ஆக்கியுள்ள பிசிசிஐ-யின் செயல்பாடுக்கு கிரெடிட் கொடுத்தாக வேண்டும். இப்போது எல்லாம் ஐபிஎல் காரணமாகவே முதல்தர கிரிக்கெட்டை வீரர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement