முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் இல்லாத திட்டத்தை கடைசி போட்டியில் கையிலெடுக்கும் ரோஹித் சர்மா – எதற்கு தெரியுமா?

IND-vs-ENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் ஏற்கனவே இந்திய அணி இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அதன்பின்னர் அடுத்தடுத்து 3 வெற்றிகளை பெற்று சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது வரும் மார்ச் 7-ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற இருக்கிறது. இந்த கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணியை வீழ்த்தும் முனைப்புடன் இந்திய அணி தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது.

- Advertisement -

அதேவேளையில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அடுத்ததாக மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த வேளையில் கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியையாவது பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் தயாராகி வருகிறது.

இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த கடைசி டெஸ்ட் போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா ஒரு முக்கிய மாற்றத்தை நிகழ்த்தும் திட்டம் குறித்து பயிற்சியாளர் டிராவிடுடன் கலந்துரையாட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற கூட்டணியுடனே களமிறங்கி விளையாடியது. ஆனால் தர்மசாலா மைதானத்தின் தன்மை மற்றும் மைதானத்தின் தட்பவெட்ப சூழ்நிலை ஆகியவற்றை கணக்கில் கொண்டு யோசித்துள்ள ரோஹித் சர்மா மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : தோனிக்கு இணையாக இவராலும் அசத்த முடியும்.. அந்த அளவிற்கு நல்லா ஆடுறாரு.. இளம் வீரருக்கு – அணில் கும்ப்ளே பாராட்டு

அப்படி 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினால் அது சரியாக இருக்கும் என்று பயிற்சியாளரும் ஒப்புதல் தெரிவித்தால் நிச்சயம் இந்திய அணி கடைசி போட்டியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கவும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement