தோனிக்கு இணையாக இவராலும் அசத்த முடியும்.. அந்த அளவிற்கு நல்லா ஆடுறாரு.. இளம் வீரருக்கு – அணில் கும்ப்ளே பாராட்டு

Kumble-and-Dhoni
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது அண்மையில் ராஞ்சி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 192 ரன்கள் என்கிற இலக்கினை துரத்தி 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் மூன்றுக்கு ஒன்று (3-2) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

அதன்படி நடைபெற்று முடிந்த இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜுரேல் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் 90 ரன்கள் எடுத்த அவர் இரண்டாவது இன்னிங்சிலும் ஆட்டமிழக்காமல் 39 ரன்களை குவித்து அசத்தினார்.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு நான்காவது டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் தொடரின் இரண்டாவது போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்று அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் துருவ் ஜுரேல் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மேலும் எதிர்வரும் டெஸ்ட் போட்டிகளிலும் இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இவ்வேளையில் அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பலரது மத்தியில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏனெனில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறாத வேளையில் கே.எல் ராகுல், இஷான் கிஷன், கே.எஸ் பரத் என பல்வேறு விக்கெட் கீப்பர்கள் அந்த இடத்தில் பரிசோதிக்கப்பட்டனர்.

- Advertisement -

ஆனால் பேட்டிங் மற்றும் கீப்பிங் இரண்டிலுமே அசத்தக்கூடிய வீரர்கள் இதுவரை கிடைக்காமல் இருந்த வேளையில் துருவ் ஜுரேல் இரண்டு துறையிலுமே அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளதால் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் துருவ் ஜுரேலின் அசத்தலான ஆட்டத்தை வெகுவாக பாராட்டி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அணில் கும்ப்ளே கூறுகையில் :

இதையும் படிங்க : அவர் விளையாடாததற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி சொல்வாங்க.. ஆனா இது அவமானம்.. ஜேம்ஸ் ஆண்டர்சன்

தோனி படைத்த சாதனைகளையும், உயரத்தையும் துருவ் ஜுரேலால் எட்ட முடியும். அதற்கான திறமையும் அவரிடம் இருப்பதை பார்க்க முடிகிறது. அழுத்தமான சூழலில் அவர் மிகச் சிறப்பாக விளையாடுகிறார். அதிலும் குறிப்பாக அவரால் அதிரடியாகவும் விளையாட முடிகிறது. தடுப்பாட்டமும் விளையாட முடிகிறது. இந்த நான்காவது போட்டியின் முதல் இன்னிங்சில் ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் என அனைவரையுமே அவர் நேர்த்தியாக கையாண்டார் என அணில் கும்ப்ளே பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement