அவர் விளையாடாததற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி சொல்வாங்க.. ஆனா இது அவமானம்.. ஜேம்ஸ் ஆண்டர்சன்

James Anderson 2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் விரைவில் முடிவடைய உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு இறுதியாக நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று சொன்னதை இங்கிலாந்து செய்து காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றிகளை பெற்ற இந்தியா அபார கம்பேக் கொடுத்தது. அதனால் 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் தொடரை வென்றுள்ள இந்தியா தங்களுடைய சொந்த ஊரில் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காமல் இருந்து வரும் சாதனையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

- Advertisement -

நன்றியும் அவமானமும்:
மறுபுறம் சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடத் தவறிய இங்கிலாந்து அதிரடியாக விளையாட முயற்சித்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விலகினார். சொல்லப்போனால் தன்னுடைய 12 வருட டெஸ்ட் கேரியரில் ஒரு முழுமையான தொடரில் விராட் கோலி விளையாடாமல் விலகியது இதுவே முதல் முறையாகும்.

ஆனால் ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களே அவர் இல்லாத குறை தெரியாத அளவுக்கு சிறப்பாக விளையாடி இங்கிலாந்தை தோற்கடித்து விட்டனர். இந்நிலையில் விராட் கோலி இத்தொடரில் விளையாடாததற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என அந்த அணியின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

- Advertisement -

அதே சமயம் விராட் கோலி போன்ற மகத்தான வீரரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாத வாய்ப்பு பறிபோனது அவமானம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி இந்த தொடரில் விளையாடாமல் சென்றதற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என்று கணிக்கிறேன். ஏனெனில் அவர் அந்தளவுக்கு தரமானவர். ஆனால் எங்களுடைய கண்ணோட்டத்தில் நீங்கள் எப்போதும் சிறந்தவர்களுக்கு எதிராக உங்களுடைய திறமையை சோதிக்க விரும்புவீர்கள்”

இதையும் படிங்க: அதை பற்றி சொல்ல வேண்டியதில்ல.. வாங்க ஒன்னா சேந்து தமிழ்நாட்டை தோற்கடிப்போம்.. ஸ்ரேயாஸ்க்கு ரகானே வரவேற்பு

“அந்த வகையில் பல ஆண்டுகளாக அவருக்கு எதிராக பந்து வீசுவது எனக்கு கடினமாக இருந்தது. அப்படிப்பட்ட அவர் இத்தொடரில் விளையாடாதது அவமானம்” என்று கூறினார். முன்னதாக 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக பெட்டிப் பாம்பாக அடங்கிய விராட் கோலி ஒரு அரை சதம் கூட அடிக்காமல் திண்டாடினார். ஆனால் 2018 சுற்றுப்பயணத்தில் ஆண்டர்சனுக்கு தக்க பதிலடி கொடுத்த விராட் கோலி மொத்தம் 530 ரன்கள் குவித்து தன்னை உலகத்தரம் வாய்ந்த வீரராக நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement