மும்பை இந்தியன்ஸ்ஸின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட பாண்டியாவிற்கு வாழ்த்து தெரிவித்து – அவரது மனைவி வெளியிட்ட பதிவு

Natasha
- Advertisement -

கடந்த 2022-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னணி ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவை ஏலத்திற்கு முன்னதாகவே தங்களது அணியில் 15 கோடி ரூபாய் கொடுத்து எடுத்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது நேரடியாக அவரை கேப்டனாக நியமித்து அவரது தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட அணியை கட்டமைத்தது. அப்படி அவர்கள் கட்டமைத்த அந்த ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது அறிமுக சீசனிலேயே ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

அதோடு நடைபெற்ற முடிந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இறுதிப்போட்டி வரை சென்று சிஎஸ்கே அணியிடம் தோல்வியை சந்தித்து இரண்டாவது அணியாக வெளியேறியது. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அற்புதமான கேப்டன்சியை வெளிப்படுத்திய ஹார்டிக் பாண்டியாவை எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

- Advertisement -

இப்படி மீண்டும் தங்களது அணியில் ஹார்டிக் பாண்டியாவை வாங்கியதற்காக 15 கோடி ரூபாய் என்கிற பெரிய தொகையை அவர்கள் வழங்கியுள்ளனர். அதோடு குஜராத் அணியிலிருந்து மும்பை அணிக்கு பாண்டியா மாறிய கையோடு அவரை புதிய கேப்டனாகவும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. இப்படி மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு ரோகித்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளாக மும்பை அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி ரோகித் சர்மா ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தும் அவரை இப்படி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது தவறு என்று ரசிகர்கள் கொதித்து எழுந்து வருகின்றனர். அதேவேளையில் பாண்டியா குஜராத் அணியிலிருந்து மும்பை அணிக்கு மாற வேண்டுமெனில் எனக்கு கேப்டன் பதவி வழங்க வேண்டும் என்று கண்டிஷன் போட்ட பின்னரே அணிமாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இப்படி பெரிய அளவில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மாற்றம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியுள்ள ரோகித் சர்மாவை பாராட்டி வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் ஹார்திக் பாண்டியாவிற்கு அதிகளவு ரசிகர்கள் மத்தியிலும், சகவீரர்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

இதையும் படிங்க : இந்தியா தாங்குமா.. பிங்க் ஒருநாள் கிரிக்கெட்டில் மிரட்டும் தெ.ஆ அணி.. பிங்க் ஜெர்ஸியில் விளையாட காரணம் என்ன?

இந்நிலையில் ஹார்டிக் பாண்டியாவின் இந்த கேப்டன்சி பதவி குறித்து அவரது மனைவி தற்போது வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்ட பதிவை பகிர்ந்துள்ள அவரது மனைவி “ஷைன் மை ஸ்டார்” (Shine My Star) என ஹார்டின் எமோஜியுடன் கேப்ஷன் போட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் சீருடை அணிந்தவாறு ஹார்டிக் பாண்டியா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement