இந்தியா தாங்குமா.. பிங்க் ஒருநாள் கிரிக்கெட்டில் மிரட்டும் தெ.ஆ அணி.. பிங்க் ஜெர்ஸியில் விளையாட காரணம் என்ன?

RSA Pink ODI
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 1 – 1 (3) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா சமன் செய்தது. மறுபுறம் சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கி தென்னாப்பிரிக்காவை சமன் செய்த இந்திய அணி கோப்பையை பகிர்ந்து கொண்டது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 17ஆம் தேதி துவங்கியது.

ஜோஹன்ஸ்பர்க் நகரில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்கியது. அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் இந்திய சார்பில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகமாக விளையாடுவார் என்று கேப்டன் ராகுல் அறிவித்தார்.

- Advertisement -

பிங்க் ஜெர்ஸி:
அதை விட இந்த போட்டியில் வழக்கமான பச்சை நிற ஜெர்சிக்கு பதிலாக தென்னாப்பிரிக்க அணியினர் இளஞ்சிவப்பு நிற ஜெர்சியை அணிந்து விளையாடினார்கள். இதற்கான காரணம் என்னவெனில் நவீன யுகத்தில் நிறைய பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. எனவே அதைப் பற்றி தங்கள் நாட்டில் உள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தென்னாப்பிரிக்க அணி ஒவ்வொரு வருடமும் ஒரு ஒருநாள் போட்டியில் இளஞ்சிவப்பு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாடி வருகிறது.

ஆனால் இதில் விஷயம் என்னவெனில் இந்த ஜெர்ஸியை அணிந்து விளையாடிய போட்டிகளில் தென்னாப்பிரிக்கா மறக்க முடியாத அதிரடியான வெற்றிகளை பெற்றுள்ளது. குறிப்பாக 2015ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இதே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம், சதம் வீரராக உலக சாதனை படைத்து தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

அந்த வகையில் மொத்தமாக வரலாற்றில் இதுவரை பிங்க் ஜெர்சி அணிந்து விளையாடிய 11 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா 9 வெற்றிகளை பதிவு செய்து மிரட்டலாக செயல்பட்டு வருகிறது. 2 போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்தது. எனவே இந்த போட்டியிலும் அந்த அணி அதிரடியாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்தியா தாங்குமா என்ற கலக்கம் இந்திய ரசிகர்களிடம் இருந்தது.

இதையும் படிங்க: ஆரம்பத்திலேயே அடித்த அதிர்ஷ்டம்.. தெ.ஆ முதல் போட்டியிலேயே அறிமுகமான சுதர்சன்.. இந்திய பிளேயிங் லெவன் இதோ

இருப்பினும் ரீசா ஹென்றிக்ஸ், வேன் டெர் டுஷன் என 2 முக்கிய வீரர்களை தன்னுடைய முதல் ஓவரிலேயே அர்ஷிதீப் சிங் அடுத்தடுத்து டக் அவுட்டாக்கி இந்தியாவுக்கு இப்போட்டியில் அபாரமான துவக்கத்தை கொடுத்துள்ளார். அதனால் இந்த போட்டியில் இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement