நான் இந்த சீரிஸ்ல இன்னைக்கு இவ்ளோ சூப்பரா விளையாட காரணம் இதுதான் – நடராஜன் முதல் பேட்டி

Nattu
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 186 ரன்களை குவிக்க 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 174 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இருப்பினும் இந்திய அணி தொடரில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்ததால் 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தொடர் நாயகனாக ஹார்டிக் பாண்டியா தேர்வானார்.

Nattu

- Advertisement -

இந்த தொடர் முழுவதுமே தமிழக வீரரான நடராஜன் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே சிறப்பாக பந்துவீசி வந்தார். இன்றைய போட்டியிலும் சிறப்பாக பந்துவீசிய நடராஜன் 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து ஓரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இந்த தொடரில் தொடர் நாயகன் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து அவருக்கு சிறிது ஏமாற்றம் என்றாலும் தனது அபாரமான பந்து வீச்சை இந்த மூன்று போட்டியிலும் வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை பெரிதளவில் நடராஜன் ஈர்த்துள்ளார் என்றால் அது மிகையல்ல.

மேலும் போட்டி முடிந்து மைதானத்தில் இருந்தபடியே சோனி தொலைக்காட்சி வர்ணனையாளரும், இந்திய அணியின் முன்னாள் வீரான முரளி கார்த்திக் (தமிழக வீரர்) நடராஜனை வீடியோ கான்பரன்சிங் மூலம் பேட்டி எடுத்தார். அப்போது இந்திய அணிக்கு நீங்கள் தேர்வானது குறித்தும் உங்களது மனநிலை குறித்தும் எங்களுக்கு தெளிவாக கூறுங்கள் என்று முரளி கார்த்திக் தமிழில் கேட்டுக்கொண்டார். பிறகு பேசிய நடராஜன் : ஆம் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்திய நாட்டிற்காக முதல் சீரியஸில் வெற்றியுடன் இங்கு நிற்கிறேன். இந்த தருணத்தை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு நான் சந்தோஷத்தில் இருக்கிறேன்.

nattu 1

அதுமட்டுமின்றி நெட் பவுலராக இங்கு வந்தேன். ஆனால் எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று என்னுடைய ஒட்டு மொத்த திறமையையும் இந்த தொடரில் வெளிப்படுத்தினேன். அதுமட்டுமின்றி இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் அணி நிர்வாகத்தினர் எனக்கு முழு ஆதரவு கொடுத்தனர். அணி வீரர்கள் அனைவருமே எனக்கு ஊக்கம் அளித்தனர். அவர்கள் கொடுத்த ஊக்கமும், நிர்வாகத்தின் நம்பிக்கையும், ரசிகர்களின் ஆதரவும் என்னுடைய இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு காரணம்.

Nattu

மேலும் ஐபிஎல் தொடரில் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தேன். அந்த பார்மை இந்த தொடரிலும் காண்பிப்பதற்காகவே அதை உணர்ந்தே பந்துவீசினேன். இந்த தொடர் முழுவதும் எனக்கு சிறப்பாக அமைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது உள்ள என்னுடைய சந்தோஷத்தை விவரிக்க வார்த்தை இல்லை என்று முரளி கார்த்திக்குக்கு நடராஜன் தமிழில் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது. நடராஜன் குறித்த உங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் அதனை இங்கு பதிவிடுங்கள் நண்பர்களே.

Advertisement