காயமடைந்த ஷமி. மீண்டும் நடராஜனுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு. சரியா இருக்குமா ? – விவரம் இதோ

Shami-1
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கடந்த நவ்.17ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடந்த இந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வியை பெற்றது. முதல் இன்னிங்சில் தொடக்கத்திலிருந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தது.

Umesh

- Advertisement -

இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியும் அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 53 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களை மட்டும் எடுத்திருந்தது. 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் இந்த படுமோசமான தோல்வியை கண்டு பலரும் இந்திய அணியின் தேர்வினை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் போது பாட் கம்மின்ஸ் வீசிய 21.1 ஓவரின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி களமிறங்கினார். அப்போது பாட் கம்மின்ஸ் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் முகமது சமி தவிர்த்து வர, அதில் ஒரு பவுன்சர் பந்தை எதிர்கொண்ட முகமது ஷமிக்கு கை மணிக்கட்டில் அடிபட்டது.

Shami 2

உடனே காயத்தால் அவதிப்பட்ட ஷமி சிறிது நேரத்திற்கு பிறகு அவர் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாமல் பெவிலியன் திரும்பினார். இதனைத்தொடர்ந்து, முகமது ஷமியை பரிசோதித்த மருத்துவர்கள் மேற்கொண்ட ஸ்கேனில், எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் முகமது ஷமி மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் குறைவு. இதனால் முகமது ஷமிக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இடம்பெற வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

Nattu-1

இருப்பினும், பயிற்சிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளதால் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அதேபோன்று டெஸ்ட் அணியில் பேக்அப் பவுலராக நடராஜன் சேர்க்கப்படுவார் என்றும் தெரிகிறது.

Advertisement