எப்படியாவது ஜெயிச்சுடுங்க இந்தியா.. இல்லனா என்னோட ரெகார்ட் உடைஞ்சுரும்.. நாசர் ஹுசைன் வேடிக்கை பதிவு

Nasser Hussain 4
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக துவங்கியுள்ள ஐந்து போட்டிகள் கூட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை விட இந்தியா 190 ரன்களை முன்னிலையாக கொண்டிருந்ததால் கண்டிப்பாக வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் 2வது இன்னிங்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஓலி போப் 196 ரன்கள் குவித்து இங்கிலாந்தை காப்பாற்றினார். இறுதியில் வெறும் 231 ரன்களை சேசிங் செய்யவிடாமல் 7 விக்கெட்டுகள் எடுத்த டாம் ஹார்ட்லி இந்தியாவை 202 ரன்களுக்கு சுருட்டி தன்னுடைய நாட்டுக்கு மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

கமான் இந்தியா:
அந்த வகையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வரும் இங்கிலாந்து கடந்த 2 வருடங்களாக தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வருகிறது. இருப்பினும் வெளிநாடுகளில் அந்த அணியால் அதிரடியான அணுகுமுறையை பயன்படுத்தி சாதிக்க முடியாது என்ற விமர்சனங்கள் ஒருபுறம் இருக்கின்றன.

அந்த விமர்சனங்களை 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் தோற்கடித்து பொய்யாக்கிய இங்கிலாந்து தற்போது இந்தியாவிலும் 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இதுவரை 19 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் அதில் இங்கிலாந்துக்கு 14 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக ஹைதராபாத் நகரில் பெற்ற வெற்றியையும் சேர்த்து அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த இங்கிலாந்து கேப்டன்களின் பட்டியலில் அவர் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆத்தர்டனை (13 வெற்றிகள்) முந்தியுள்ளார். மேலும் அந்த பட்டியலில் அடுத்ததாக மற்றொரு முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் 17 வெற்றிகளுடன் உள்ளார். எனவே இந்த தொடரில் அவருடைய சாதனையையும் பென் ஸ்டோக்ஸ் முறியடிக்க வாய்ப்புள்ளதாக இங்கிலாந்தின் பிரபல டெய்லி மெயில் பத்திரிகையின் நிருபர் ரிச்சர்ட் கிப்ஸன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அதை பற்றி சர்ப்ராஸ் நேத்து சொன்னாரு.. என்னோட கவனம் வேறைல இருக்கு.. முஷீர் கான் பேட்டி

அதை பார்த்த நாசர் உசேன் “கமான் இந்தியா” என்று ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதாவது தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்தால் பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய சாதனையை உடைத்து விடுவார் என்பதால் அடுத்து வரும் போட்டிகளில் எப்படியாவது வெல்லுங்கள் இந்தியா என்ற வகையில் நாசர் ஹுசைன் ஜாலியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து இத்தொடரின் 2வது போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement