அதை பற்றி சர்ப்ராஸ் நேத்து சொன்னாரு.. என்னோட கவனம் வேறைல இருக்கு.. முஷீர் கான் பேட்டி

Musheer Khan 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 2024 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையில் உதய் சஹரன் தலைமையில் நடப்புச் சாம்பியன் இந்தியா விளையாடி வருகிறது. அதில் லீக் சுற்றில் வங்கதேசம், அயர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகளை தோற்கடித்த இந்தியா சூப்பர் 6 சுற்றில் வலுவான நியூசிலாந்தின் 214 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக வெற்றி நடை போட்டு வருகிறது.

ஜனவரி 30ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 295/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முசீர் கான் சதமடித்து 131 (126), ஆதர்ஷ் சிங் 52 (58) ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மேசன் கிளார்க் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 296 ரன்களை துரத்திய நியூசிலாந்து சுமாராக விளையாடி 81 ரன்கள் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஃபோன்ல சொன்னாரு:
இந்தியா சார்பில் அதிகபட்சமாக சௌமி பாண்டே 4 விக்கெட்களை எடுத்தார். இந்த வெற்றிக்கு 131 ரன்கள் மற்றும் 2 விக்கெட்களை எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய முஷீர் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார். நேற்று இந்திய அணிக்காக முதல் முறையாக தேர்வான இளம் வீரர் சர்ப்ராஸ் கானின் தம்பியான இவர் இந்த உலகக் கோப்பையில் 2 சதங்கள் உட்பட 325* ரன்களை விளாசி அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார்.

மேலும் ஒரு அண்டர்-19 உலகக் கோப்பையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதமடித்த இந்திய வீரர் என்ற ஷிகர் தவான் சாதனையை சமன் செய்துள்ள அவர் 4 விக்கெட்களையும் எடுத்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்திய அணிக்காக தேர்வானது பற்றி சர்பராஸ் கான் தொலைபேசியில் அழைத்து தம்மிடம் தெரிவித்ததாக முசீர் கான் கூறியுள்ளார்.

- Advertisement -

அத்துடன் பந்து வீச்சில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு ஆல் ரவுண்டராக முன்னேறுவதில் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “இந்த உலகக் கோப்பையில் 2 சதங்கள் அடித்துள்ளது நல்ல உணர்வை கொடுக்கிறது. இதே போல நான் தொடர்ச்சியாக பேட்டிங் செய்ய விரும்புகிறேன். இது எனக்கு நல்ல தன்னம்பிக்கையையும் கொடுத்துள்ளது. இப்போட்டியின் பிட்ச் மிகவும் மெதுவாக இருந்தது”

இதையும் படிங்க: தவான் சாதனை சமன் செய்த முஷீர் கான்.. அண்ணன் சர்ப்ராஸை மிஞ்சும் தம்பி.. 2 அபார சாதனை

“அதில் எங்களின் பவுலர்கள் நன்றாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். என்னுடைய சகோதரர் நேற்று என்னை அழைத்து இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வானது பற்றி சொன்னார். நான் என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்துகிறேன். குறிப்பாக பந்து வீச்சில் கச்சிதமாக செயல்படுவதில் கவனம் செலுத்துகிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் நேபாளை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement